இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா படைத்துள்ள தனித்துவமான உலக சாதனை...!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

Update: 2024-01-12 05:11 GMT

மொகாலி,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் சர்வதேச டி20 போட்டிகளில் ரோகித் சர்மா ஒரு தனித்துவமான உலக சாதனையை படைத்துள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி வெற்றி பெற்ற 100 போட்டிகளில் அங்கமாக இருந்த முதல் வீரர் என்ற தனித்துவமான உலக சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

ரோகித் சர்மா இந்திய அணிக்காக தம்முடைய கேரியரில் இதுவரை 149 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 100 முறை இந்தியா வென்றுள்ளது. அந்த வகையில் 100 வெற்றிகளில் அங்கமாக இருந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த வரிசையில் 2வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் (86 வெற்றிகள்) உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்