இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 : போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றம்

இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்த போட்டி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-08-01 13:46 GMT

Image Courtesy : @Windies Cricket

பாசட்டரே,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.

இந்த நிலையில் அணி வீரர்களின் பொருட்கள் அடங்கிய 'லக்கேஜ்' மைதானத்திற்கு வந்து சேர தாமதம் ஏற்பட்டுள்ளதால் கடைசி நேரத்தில் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்