சென்னையில் இந்தியா - வங்காளதேசம் டெஸ்ட் போட்டி: நாளை டிக்கெட் விற்பனை
முதலாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது.;
சென்னை,
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. போட்டி நடைபெறும் 5 நாட்களுக்கும் அன்றைக்கு காலை 7 மணிக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.200, ரூ.400 ,ரூ.1000 என 3 பிரிவுகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படும் .