அதிரடி காட்டிய நைப்: இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான ஆட்டம் 'டை'

ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது.

Update: 2024-01-17 17:12 GMT

பெங்களூரு,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 போட்டியில் விளையாடி வருகிறது. இதில், 2 போட்டியில் இந்தியா வெற்றிபெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிகபட்சமாக 121 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினர். அந்த அணியின் தொடக்க வீரர்கள் குர்பாஸ், இப்ராகிம் இருவரும் அரைசதம் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகினர். அடுத்துவந்த குல்படின் நைப் அதிரடியாக ஆடினார்.

இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆப்கானிஸ்தான் கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது, ஆப்கானிஸ்தான் வீரர் குல்படின் நைப் அதிரடியாக ஆடினார். ஆப்கானிஸ்தான் அணி கடைசி பந்தில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. 

அப்போது, ஆப்கானிஸ்தான் 2 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் டை ஆனது. இரு அணிகளும் 212 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்