ஐசிசி ஒருநாள்போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசை : முதல் இடத்தில் இந்திய வீரர் பும்ரா..!

ஒருநாள் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது

Update: 2022-07-13 10:36 GMT

Image Courtesy : ICC Twitter 

துபாய்,

ஒருநாள் போட்டியில் சிறந்த ,பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. பந்துவீச்சாளர்களில் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேக பந்துவீச்சாளர் பும்ரா முதல் இடத்தில் உள்ளார் .நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் பும்ரா முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார் . 2வது இடத்தில் ட்ரெண்ட் போல்ட் (நியூசிலாந்து) உள்ளார் .3வது இடத்தில் ஷாஹீன் அப்ரிடி (பாகிஸ்தான் ) உள்ளார்.

அதேபோல் டி20 போட்டியில் சிறந்த , பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.அதன்படி பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்தில் உள்ளார்.2வது இடத்தில் முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்),3வது மார்க்ரம் (தென் ஆப்பிரிக்கா )உள்ளனர்.இந்திய வீரர்களில் சூர்ய குமார் யாதவ் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்