சூர்ய குமார் யாதவ் 49 ரன்களில் அவுட் ஆகினர். இந்திய அணி 47 ஓவர்கள் நிலவரப்படி 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது. பும்ரா 7 ரன்களுடனும் குல்தீப் யாதவ் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அடில் ரஷித் பந்து வீச்சில் எல்டபிள்யூ முறையில் ஜடேஜா ஆட்டமிழந்தார். இந்திய அணி 40.4 ஓவர்கள் நிலவரப்படி 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. சூர்ய குமார் யாதவ் 31 ரன்களுடனும் முகம்மது சமி ரன் எதுவும் இன்றியும் களத்தில் உள்ளனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 87 ரன்களில் ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அடில் ரஷித் பந்தில் லிவிங்ஸ்டனிடம் கேட்ச் கொடுத்து ரோகித் அவுட் ஆனார். இந்திய அணி 38 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. சூர்ய குமார் யாதவும் ஜடேஜாவும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி 32 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா 82 ரன்களிலும் சூர்யகுமார் யாதவ் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 39 (58 பந்துகள்) ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இங்கிலாந்து வீரர் வில்லி பந்து வீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து கே.எல் ராகுல் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் ஜோடி 91 ரன்கள் சேர்த்து இருந்தது.
50 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும், கேப்டன் ரோகித் சர்மா- கே.எல் ராகுல் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்திய அணி 27 ஓவர்கள் நிலவரப்படி 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 66 ரன்களுடனும் , கே.எல் ராகுல் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.