உலக கோப்பை கிரிக்கெட்; இங்கிலாந்து அணியை பந்தாடியது இந்தியா

இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 230 ரன்களை இந்தியா நிர்ணயம் செய்துள்ளது.;

Update: 2023-10-29 09:27 GMT

லக்னோ,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில்  நடைபெற்று வருகின்றன. அந்த வகையில்,  உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 29-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. 

Live Updates
2023-10-29 15:58 GMT

இந்திய அணி நிர்ணயித்த 230 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 34.5 ஓவர்களில் 129 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன் மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

2023-10-29 15:26 GMT

இங்கிலாந்து அணி 29 ஓவர்கள் நிலவரப்படி 7 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 132 ரன்கள் தேவை. கைவசம் இன்னும் 3 விக்கெட்டுகளே இருப்பதால் இங்கிலாந்து அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

2023-10-29 14:58 GMT

மோயின் அலி 15 ரன்களில் ஆட்டமிழந்தார். 

2023-10-29 14:53 GMT

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வரும் இங்கிலாந்து அணியை மோயின் அலி -லிவிங்ஸ்டன் ஜோடி சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 22 ஓவர்கள் நிலவரப்படி 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 79 ரன்கள் சேர்த்துள்ளது. மோயின் அலி 14 ரன்களுடனும் லிவிங்ஸ்டன் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

2023-10-29 14:33 GMT



2023-10-29 14:31 GMT

இங்கிலாந்து அணி 5 வது விக்கெட்டை பறிகொடுத்தது. குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஜோஸ் பட்லர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். 16 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. மோயின் அலி 7 ரன்களும் லியாம் லிவிங்ஸ்டன் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 176 ரன்கள் தேவைப்படுகிறது. 

2023-10-29 13:59 GMT

230-ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. 10 ஓவர்கள் நிலவரப்படி 4 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்து இங்கிலாந்து விளையாடி வருகிறது. பும்ரா, சமி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

2023-10-29 13:49 GMT

பென்ஸ்டோக்ஸ் டக் அவுட் ஆனார். முகம்மது சமி பந்து வீச்சில் போல்டு ஆகி ஆட்டமிழந்தார். 

2023-10-29 13:42 GMT

இங்கிலாந்து அணி 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.  

2023-10-29 12:32 GMT

இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 230 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்