அந்த வீரர்கள் மீது கம்பீர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் - கவாஸ்கர்

பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்ததால் இந்திய அணி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.;

Update:2025-01-06 07:37 IST

மும்பை,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் 3-1 (5 போட்டிகள்) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று 10 வருடங்களுக்குப்பின் மீண்டும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியுள்ளது.

கோப்பையை இழந்த இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னணி வீரர்களான ரோகித், கோலி ஓய்வு பெற வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அத்துடன் தலைமை பயிற்சியாளர் கம்பீர் மீதும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "ரஞ்சி கிரிக்கெட் தொடரின் அடுத்த ரவுண்ட் விரைவில் நடைபெற உள்ளது. இதில் எத்தனை சர்வதேச வீரர்கள் ஆடுகிறார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளேன். இதில் தங்களால் விளையாட இயலாது என்று எந்த ஒரு வீரரும் சொல்லக்கூடாது. அப்படி கூறும் வீரர்கள் மீது தலைமை பயிற்சியாளர் கம்பீர் கடினமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு சிறந்த முறையில் தயாராவதற்கு உள்ளூர் போட்டிகளில் ஆடுவதுதான் சிறந்த வழி" என்று கூறினார்.

இந்திய உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பையின் அடுத்த ரவுண்ட் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்