வான்கடே மைதானத்தில் உலகக்கோப்பை போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுக்கு இலவச பாப்கார்ன்!

உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.;

Update:2023-11-02 14:54 IST

மும்பை,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.

இதனையொட்டி மும்பை கிரிக்கெட் வாரியம் வான்கடே மைதானத்தில் இந்தியா - இலங்கை இடையேயான போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்கு பாப்கார்னுடன் குளிர்பானமும் இலவசமாக வழங்குகிறது.

இந்த ஆட்டம் முதல், உலகக்கோப்பை அரையிறுதி வரை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டிகளின்போது பார்வையாளர்களுக்கு பாப்கார்னுடன் குளிர்பானமும் இலவசமாக வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் வாரியம் முன்பே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்