நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் நியமனம்

நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் ரங்கனா ஹெராத் நியமிக்கப்பட்டுள்ளார்.;

Update:2024-09-06 12:16 IST

image courtesy: X (Twitter) / கோப்புப்படம்

வெல்லிங்டன்,

நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடருக்காக நியூசிலாந்து வீரர்கள் இந்தியா வந்துள்ளனர்.

இந்த தொடர் நிறைவடைந்ததும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 18ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த 2 டெஸ்ட் தொடர்களுக்கும் நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை முன்னாள் வீரர் ரங்கனா ஹெராத் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நியூசிலாந்தின் துணை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்