முதல் டெஸ்ட் : அஸ்வின் சுழலில் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்..! 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட் , ஜடேஜா 3 விக்கெட் , வீழ்த்தினர்.

Update: 2023-07-12 19:35 GMT


டொமினிகா,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது.

இந்த தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணியினர் வெற்றியோடு தொடங்கும் வேட்கையுடன் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்கள் டேகனரின் சந்தர்பால் 12 ரன்களும் , கேப்டன் கிரேக் பிராத்வைட் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

ரேமன் ரைபர் 2 ரன்கள் , ஜெர்மைன் பிளாக்வுட் 14 ரன்கள் , ஜோசுவா டா சில்வா 2 ரன்கள் , ஜேசன் ஹோல்டர்18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அனியில் சிறப்பாக விளையாடிய அலிக் அதானாஸ் 47 ரன்கள் எடுத்தார்.இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது 

இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட் , ஜடேஜா 3 விக்கெட் , ஷார்துல் தாகூர் , சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்