தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்; 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 145/4

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

Update: 2024-08-09 22:23 GMT

image courtesy: AFP

போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து தொடர்ந்து நடைபெற்ற 2-வது நாள் ஆட்டம் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 113 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் எடுத்திருந்தது.

வியான் முல்டர் 37 ரன்களுடனும், ரபடா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 357 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமல் வாரிக்கன் 4 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிராத்வைட் மற்றும் மிகைல் லூயிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் கிரேக் பிராத்வைட் மற்றும் மிகைல் லூயிஸ் ஆகியோர் இருவரும் தலா 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.

இதையடுத்து களம் இறங்கிய கீசி கார்டி 42 ரன், அலிக் அத்தானாஸ் 3 ரன் எடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து ஜேசன் ஹோல்டர் மற்றும் கவேம் ஹாட்ஜ் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர்.

இறுதியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 67 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 145 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் இன்னும் 212 ரன்கள் பின்னிலையில் உள்ளது. ஜேசன் ஹோல்டர் 13 ரன்னும், கவேம் ஹாட்ஜ் 11 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகராஜ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்