உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி, இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 41-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.;
மும்பை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள ஒரு அரைஇறுதி இடத்துக்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
இந்த சூழலில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 41-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.
இதனிடையே, மும்பையில் வரும் 15-ஆம் தேதி முதல் அரையிறுதி, கொல்கத்தாவில் 16-ஆம் தேதி இரண்டாவது அரையிறுதி மற்றும் அகமதாபாத்தில் 19-ஆம் தேதி இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று இரவு 8 மணிக்கு https://tickets.cricketworldcup.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
முதல் அரையிறுதியில் இந்தியாவுடன் நான்காவது இடம் பிடிக்கும் அணியும், இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும் மோத உள்ளன.