சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி..!!

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.;

Update: 2023-11-01 09:18 GMT

image courtesy; AFP

லண்டன்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. 31 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இன்னும் 14 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அணியும் அரையிறுதியை எட்டவில்லை.

இதில் பங்கேற்றுள்ள நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 6 ஆட்டங்களில் விளையாடி அதில் 1 வெற்றி மற்றும் 5 தோல்விகள் கண்டு அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய இழந்து விட்டது.

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக 33 வயதான இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி அறிவித்துள்ளார்.

டேவிட் வில்லி இங்கிலாந்து அணிக்காக இதுவரை 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 94 விக்கெட்டுகளையும், 43 டி20 போட்டிகளில் விளையாடி 51 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்