டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா ..? - ஐசிசி அதிரடி அறிவிப்பு

20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகை எவ்வளவு என்பதை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

Update: 2022-09-30 09:39 GMT

8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகை எவ்வளவு என்பதை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

அதன்படி சாம்பியன் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 13,04,90,640) பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலரும், அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலரும் வழங்கப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு 40 ஆயிரம் டாலர் வழங்கப்படும். சூப்பர் 12 சுற்றில் இருந்து வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 70 ஆயிரம் அமெரிக்க டாலர் வழங்கப்படும். தொடரின் மொத்த பரிசுத் தொகை 5.6 மில்லியன் (இந்திய பண மதிப்பில் ரூ. 45,67,17,240) ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்