"டெஸ்ட் போட்டியில் இனி ஆர்ச்சர் விளையாடுவதை கற்பனை செய்வது கடினம் " - கெவின் பீட்டர்சன்

ஜோப்ரா ஆர்ச்சரின் எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார்.

Update: 2022-05-22 14:34 GMT

Image Courtesy : AFP 

மும்பை,

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தூணாக விளங்கி வருபவர் ஜோப்ரா ஆர்ச்சர். வேகப்பந்துவீச்சாளரான இவர் அசுர வேகத்தில் பந்துவீசி பேட்ஸ்மேன்-களுக்கு கடும் சவால் அளிப்பவர். இவருக்கு முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் முதல் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அதை தொடர்ந்து இரண்டாவது அறுவை சிகிச்சை கடந்த டிசம்பரில் நடந்தது. 5 மாதங்களாக ஓய்வில் இருக்கும் அவர் தற்போது தான் குணமடைந்து வருகிறார். இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் அவர் விளையாடவில்லை.

இந்த நிலையில் ஜோப்ரா ஆர்ச்சரின் எதிர்காலம் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார்.

ஆர்ச்சர் குறித்து அவர் கூறுகையில், " ஜோப்ரா ஆர்ச்சர் இந்த ஆண்டு கோடைகாலத்தில் நடைபெற இருக்கும் அனைத்து போட்டிகளையும் இழக்க நேரிடும். இங்கிலாந்து மற்றும் பிற அணிகளுக்காக பல சமயங்களில் புத்திசாலித்தனமான பங்களிப்பை அவர் அளித்துள்ளார்.

இந்த காயம் அவருக்கு பயங்கரமான அடியாகும். அவர் இதிலிருந்து மீண்டு மீண்டும் நீண்ட வடிவிலான கிரிக்கெட்டை (டெஸ்ட் போட்டி ) விளையாடுவார் என்று கற்பனை செய்வது கடினம். அதுதான் உண்மை. இருப்பினும் அவர் இன்னும் குறுகிய வடிவிலான போட்டியில் சிறந்த உயரத்தை அடைய முடியும்" என பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்