பிக் பாஷ் லீக்; டிம் சீபர்ட் அரைசதம்... மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 169 ரன்கள் குவிப்பு
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் தரப்பில் அதிகபட்சமாக டிம் சீபர்ட் 55 ரன்கள் எடுத்தார்.
சிட்னி,
இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடர் போல ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், பிக் பாஷ் லீக் தொடரின் 14வது சீசன் நேற்று தொடங்கியது. இந்த தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் இன்று ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் மற்றும் ஜோஷ் பிரவுன் களம் இறங்கினர். இதில் ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் 21 ரன்னிலும், ஜோஷ் பிரவுன் 22 ரன்னிலும் அவுட் ஆகினர்.
தொடர்ந்து களம் புகுந்த டிம் சீபர்ட் ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் மெக்கன்சி ஹார்வி 11 ரன், லாரி எவன்ஸ் 1 ரன், ஹாசன் கான் 6 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய டிம் சீபர்ட் அரைசதம் அடித்த நிலையில் 55 ரன்னில் அவுட் ஆனார்.
தொடர்ந்து களம் புகுந்த பெர்கஸ் ஓ நீல் 9 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து வில் சதர்லேண்ட் மற்றும் தாமஸ் ஸ்டீவர்ட் ரோஜர்ஸ் ஜோடி சேர்ந்தனர். இதில் அதிரடியாக ஆடிய சதர்லேண்ட் 36 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 7 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் குவித்தது.
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் தரப்பில் அதிகபட்சமாக டிம் சீபர்ட் 55 ரன்கள் எடுத்தார். சிட்னி சிக்சர்ஸ் தரப்பில் பென் துவர்ஷுயிஸ், சீன் அபோட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி ஆட உள்ளது.