ஜிம்பாப்வே வீரர்களுக்கு அபராதம் விதித்த ஐ.சி.சி. - காரணம் என்ன..?

ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது டி20 போட்டி கடந்த 14ம் தேதி ஹராரேவில் நடைபெற்றது.

Update: 2024-12-16 11:35 GMT

Image Courtesy: @ZimCricketv

ஹராரே,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

ஜிம்பாப்வே - ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது டி20 போட்டி கடந்த 14ம் தேதி ஹராரேவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி குறித்த நேரத்திற்குள் பந்துவீசி முடிக்க தவறியதன் காரணமாக அந்த அணி வீரர்களுக்கு ஐ.சி.சி. அபராதம் விதித்துள்ளது.

அதன்படி ஜிம்பாப்வே வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடுவர்களின் குற்றச்சாட்டை ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ராசா ஏற்றுக்கொண்டதாகவும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்