ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-16 11:00 GMT

Image Courtesy: @ACBofficials / X (Twitter) / File Image.

காபூல்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. 2 டெஸ்ட் போட்டிகளும் புலவாயோவில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு ஹஷ்மத்துல்லா ஷாஹிதி கேப்டனாகவும், ரஹ்மத் ஷா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த அணியில் அனுபவ வீரரான ரஷித் கான் இடம் பிடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி விவரம்: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா ( துணை கேப்டன்), இக்ராம் அலிகைல் (விக்கெட் கீப்பர்), அப்சர் ஜசாய் (விக்கெட் கீப்பர்), ரியாஸ் ஹசன், செடிகுல்லா அடல், அப்துல் மாலிக், பஹீர் ஷா மஹ்பூப், இஸ்மத் ஆலம், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஜாஹிர் கான், ஜியா உர் ரெஹ்மான் அக்பர், ஜாஹிர் ஷெஹ்சாத், ரஷித் கான், யாமின் அஹ்மத்சாய், பாஷிர் அஹமது ஆப்கான், நவீத் சத்ரான், பரீத் அஹ்மத் மாலிக்.

ரிசர்வ் வீரர்கள்: நசீர் ஜமால், ஜியா உர் ரஹ்மான் ஷரிபி, இப்ராஹிம் அப்துல்ரஹிம்சாய்.


Tags:    

மேலும் செய்திகள்