பிக் பாஷ் லீக்; மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்திய சிட்னி சிக்சர்ஸ்

சிட்னி சிக்சர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 53 ரன்கள் எடுத்தார்.

Update: 2024-12-16 12:20 GMT

Image Courtesy: @BBL / @SixersBBL

சிட்னி,

இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் தொடர் போல ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்நிலையில், பிக் பாஷ் லீக் தொடரின் 14வது சீசன் நேற்று தொடங்கியது. இந்த தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் இன்று மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து

முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் குவித்தது. மெல்போர்ன் ரெனிகேட்ஸ் தரப்பில் அதிகபட்சமாக டிம் சீபர்ட் 55 ரன்கள் எடுத்தார். சிட்னி சிக்சர்ஸ் தரப்பில் பென் துவர்ஷுயிஸ், சீன் அபோட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி சிக்சர்ஸ் அணி களம் கண்டது. சிட்னி சிக்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஷ் பிலிப் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ் களம் கண்டனர்.

இதில் ஜோஷ் பிலிப் 5 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஜாக் எட்வர்ட்ஸ் களம் இறங்கினார். ஜாக் எட்வர்ட்ஸ் - ஜேம்ஸ் வின்ஸ் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் ஜாக் எட்வர்ட்ஸ் 37 ரன்னிலும், ஜேம்ஸ் வின்ஸ் 40 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய ஹென்ரிக்ஸ் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

இதில் ஜோர்டான் சில்க் 2 ரன், ஜோயல் டேவிஸ் 10 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ஹென்ரிக்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்த ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 18.3 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 172 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்னி சிக்சர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஹென்ரிக்ஸ் 53 ரன்கள் எடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்