முதல் ஒருநாள் போட்டி; பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்
பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
சென்சூரியன்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20, 3 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.
டி20 தொடரை இழ்ந்த பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களம் இறங்கும். அதேவேளையில், வெற்றிப்பயணத்தை தொடரை தென் ஆப்பிரிக்கா நினைக்கும்.இதனால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.