இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி : இந்திய அணியை வழிநடத்தும் பும்ரா ?

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-26 14:32 GMT

Image Courtesy : Twitter @BCCI 

பர்மிங்காம்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்து இருந்தது. இதனால் பயிற்சி ஆட்டத்தின் கடைசி நாளில் இந்திய அணியை வேகப்பந்துவீச்சாளர் பும்ரா வழிநடத்தினார்.

இதனால் ஜூலை 1 ஆம் தேதி தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை அந்த போட்டியில் ரோகித் விளையாடவில்லை என்றால் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியை வழிநடத்திய பும்ரா அந்த டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை வழி நடத்தவாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டால் டெஸ்ட் போட்டியில் கபில் தேவ்-க்கு பிறகு இந்திய அணியை வழிநடத்தும் வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

Tags:    

மேலும் செய்திகள்