ஜூனியர் பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரின் சிறந்த அணி - கேப்டன் இவரா?...ரசிகர்கள் ஆச்சரியம்...!
ஜூனியர் பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது;
துபாய்,
தென்ஆப்பிரிக்காவில் நடந்த பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா ருசித்த முதல் உலகக் கோப்பை இது தான்.
இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளை வைத்து தொடரின் சிறந்த அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த அணிக்கு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனான ஷபாலி வர்மா கேப்டனாக நியமிக்கப்படாதது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த அணிக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் கிரேஸ் ஸ்க்டிவன்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் அதிகபட்சமாக இந்தியா, இங்கிலாந்து அணிகளில் இருந்து தலா 3 வீராங்கனைகள் உள்ளனர்.
ஜூனியர் பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரின் சிறந்த அணி:-
1. ஸ்வேதா செஹ்ராத் (இந்தியா)
2. கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் (கேப்டன்) (இங்கிலாந்து)
3. ஷாபாலி வர்மா (இந்தியா)
4. ஜார்ஜியா பிலிம்மர் (நியூசிலாந்து)
5. தேவ்மி விஹங்கா (இலங்கை)
6. ஷோர்னா அக்டர் (வங்காளதேசம்)
7. கராபோ மெசோ (விக்கெட் கீப்பர்) (தென் ஆப்பிரிக்கா)
8. பார்ஷவி சோப்ரா (இந்தியா)
9. ஹன்னா பேக்கர் (இங்கிலாந்து)
10. எல்லி ஆண்டர்சன் (இங்கிலாந்து)
11. மேகி கிளார்க் (ஆஸ்திரேலியா)
12-வது வீரர்:- அனோஷா நசீர் (பாகிஸ்தான்)
ஜூனியர் பெண்கள் உலகக்கோப்பை தொடரின் சிறந்த அணி:-
ஸ்வேதா செஹ்ராத் (இந்தியா), கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் (கேப்டன்) (இங்கிலாந்து), ஷாபாலி வர்மா (இந்தியா), ஜார்ஜியா பிலிம்மர் (நியூசிலாந்து), தேவ்மி விஹங்கா (இலங்கை), ஷோர்னா அக்டர் (வங்காளதேசம்), கராபோ மெசோ (விக்கெட் கீப்பர்) (தென் ஆப்பிரிக்கா), பார்ஷவி சோப்ரா (இந்தியா), ஹன்னா பேக்கர் (இங்கிலாந்து), எல்லி ஆண்டர்சன் (இங்கிலாந்து), மேகி கிளார்க் (ஆஸ்திரேலியா).
12-வது வீரர்:- அனோஷா நசீர் (பாகிஸ்தான்)