2-வது டி20 போட்டி: இந்திய அணி வெற்றி பெற 8 ஓவர்களில் 91 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் குவித்தது.

Update: 2022-09-23 16:47 GMT

நாக்பூர்,

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. நேற்று பெய்த கனமழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் போட்டி நீண்ட நேரம் பாதிக்கப்பட்டது. இறுதியாக போட்டி 8 ஓவர்களாக (ஒரு அணிக்கு ) குறைக்கப்பட்டு டாஸ் போடப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் களமிறங்கினர். 8 ஓவர் போட்டி என்பதால் முதல் பந்து முதலே ஆஸ்திரேலிய வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தனர். ஆனால் இந்த பாணி கேப்டன் பின்ச்-ஐ தவிர பிறருக்கு பயனளிக்க வில்லை.

கேமரூன் கிரீன் (5 ரன்கள்) ரன் அவுட்டாகி ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் (டக் அவுட்) மற்றும் டிம் டேவிட் (2 ரன்கள்) அக்சர் படேல் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினர். 5-வது ஓவரின் கடைசி பந்தில் ஆஸ்திரேலிய அணி 46 ரன்கள் சேர்ந்திருந்த போது அதிரடியாக விளையாடி வந்த பின்ச் பும்ரா பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார்.

2-வது டி20 போட்டி: இந்திய அணி வெற்றி பெற 8 ஓவர்களில் 91 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலியாஅவர் 15 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கடைசி போட்டியில் ஜொலித்த மேத்தீவ் வேட் இந்த போட்டியிலும் பின் வரிசையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 8-வது ஓவரில் 3 சிக்சர்களை அடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் குவித்தது. வேட் 20 பந்துகளில் 41 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதை தொடர்ந்து 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்