3வது டி20 போட்டி - 22 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

3வது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Update: 2022-08-12 21:47 GMT

image courtesy: Afghanistan Cricket Board twitter

பெல்பாஸ்ட்:

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டி20 போட்டிகளில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கர்பாஸ் அரை சதமடித்து 53 ரன்கள் எடுத்தார். நஜிபுல்லா 42 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. அதிகபட்சமாக டக்கர் 31 ரன்களும் பியான் ஹாண்ட் 36 ரன்களும் எடுத்தனர். டாக்ரெல் அரை சதமடித்து 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 தொடரில் அயர்லாந்து அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்