3 வது ஒருநாள் போட்டி : நெதர்லாந்து அணிக்கு 309 ரன்கள் இலக்கு...!

நெதர்லாந்துக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 309 ரன்கள் இலக்காக நிணயித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி

Update: 2022-06-04 17:08 GMT

image tweeted by @windiescricket

ஆம்ஸ்டர்டாம்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 ஆட்டம் கொண்ட ஒருநாள் தொடரில் 3-வது போட்டி இன்று ஆம்ஸ்டெல்வின் நகரில் நடந்து வருகிறது.

டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க வீரர்களாக கைல் மேயர்ஸ், ஷாய் ஹோப் களமிறங்கினர்.இதில் ஷாய் ஹோப் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஷாமர் ப்ரூக்ஸ் தொடக்க வீரர் கைல் மேயெர்ஸுடன் கைகோர்த்தார். இருவரும் நெதர்லாந்து அணியின் பந்துவீச்சுக்கு திறம்பட சமாளித்து இவிளையாடினர். இவர்களை ஆட்டமிழக்க செய்ய நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் போராடினர்.

சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய கைல் மேயெர்ஸ் சதம் விளாசினார். 6 வது ஒருநாள் போட்டியில் விளையாடும் அவருக்கு இதுதான் முதல் சதம் ஆகும். தொடர்ந்து சிக்ஸர்களை பறக்க விட்ட அவர், 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து கேப்டன் பூரன் களம் புகுந்தார்.மறுமுனையில் அதிரடி காட்டிய ப்ரூக்ஸ் கடைசி ஓவரில் தனது முதல் ஒருநாள் சதத்தினை விளாசினார். இதற்கிடையில் பூரன் 7 ரன் , பிரண்டன் கிங் 10 ரன் , ஹோசைன் 3 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது.இறுதிவரை களத்தில் இருந்த ப்ரூக்ஸ் 101 ரன்கள் எடுத்தார்.

309 ரன்கள் இழக்கை நோக்கி நெதர்லாந்து அணி ஆடி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்