2வது டி20 போட்டி: 90 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Update: 2022-08-13 00:57 GMT

image courtesy: BLACKCAPS twitter

ஜமைக்கா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரண்டு அணிகளும் மோதிய 2வது டி20 போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ஆடினார். அவர் 41 பந்தில் 76 ரன்களும், டேரில் மிட்செல் 20 பந்தில் 48 ரன்களும் குவித்தனர். கான்வே 34 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஒபெட் மெக்காய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ரோவ்மன் போவெல் 21 ரன்களும், ரோமரியோ 18 ரன்களும், ஒபெட் மெக்காய் 23 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து நியூசிலாந்து அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 3-வது 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்