2-வது ஒரு நாள் போட்டி: ஜிம்பாப்வே அணி 96 ரன்களில் ஆல்-அவுட் - ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் அபாரம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 96 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Update: 2022-08-31 02:51 GMT

Image Courtesy: ICC Twitter

டவுன்ஸ்வில்லி,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஜிம்பாப்வே அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. அதில் முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்று பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் தொடரில் 2-வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன் படி முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணி 27.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அந்த அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 29 ரன்களும், சிக்கந்தர் ராசா 17 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா தலா 3 விக்கெட்டுகளும், கிரீன் 2 விக்கெட்டும், ஹேசில்வுட், ஆகர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். அடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆடி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்