இந்திய கட்டுமானத்துறையின் பாரம்பரிய யுக்திகள்

மரப்பலகை அச்சு (Wooden Formwork), மிவன் கட்டுமான தொழில்நுட்பம் (MIVAN construction technology), முன்வார்ப்பு தொழில்நுட்பம் (Precast technology) மற்றும் RCC சாரம் கட்டுமானம் இவை 1990களில் இருந்து இந்தியாவில் பின்பற்றப் பட்டு வருகின்றன. இந்த தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

Update: 2022-09-24 03:09 GMT

மரப்பலகை அச்சு முறை(Wooden Formwork System)

மரப் பலகை அச்சு முறை என்பது கான்கிரிட் அல்லது வேறு பொருளை கொட்டி நிரப்படும் அச்சு. இந்த கான்கிரிட் நன்றாக இறுகிய பின் மரப்பலகை அகற்றப்படும். இது மிகப் பிரபலமான குறைந்த செலவு கட்டுமான முறையாகும். இந்திய, ஜப்பான், சீனா மற்றும் கிழக்கத்திய நாடுகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறை கையாள்வதறகு எளிமையானது.

மிவன் கட்டுமான தொழில்நுட்பம் (MIVAN construction technology)

மிவன் கட்டுமான தொழில்நுட்பம் என்பது மரப்பலகை அச்சு முறை போன்றதே ஆனால் இதில் மரத்திற்கு பதிலாக அலுமினியத் தகடு பயன்படுத்தப் படுகிறது. இது அலுமினிய கட்டுமான தொழில்நுட்பம் என்றும் அழைக்கப்படும். 2020ல் இந்திய அரசாங்கம் வீட்டுத் திட்டத்திற்காக இந்த முறையை அறிவித்ததும், கல்ப்(Gulf ), யூரோப்(Europe ) மற்றும் ஆசியாவின்(Asia) சில பகுதிகளில் இத்திட்டம் மிகவும் பிரபலமடைந்தது.மிவன் அச்சு முறை குறிப்பாக பெரிய கட்டிடங்கள் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டது. இந்த முறை செலவை குறைக்கிறது. அலுமினியம் நீடித்து நிலைக்கக் கூடியது மற்றும் நில அதிர்வை தாங்கக் கூடியது. காட்டுமான கால அளவை குறைக்கிறது; அதனால் இது மிகவும் பிரபலமானது.

முன்வார்ப்பு தொழில்நுட்பம் (Precast technology)

முன்வார்ப்பு தொழில்நுட்பம் முறையில் கட்டுமானத்திற்கு தேவையான எல்லாம் (கதவுகள், ஜன்னல்கள், அடுக்குகள், டைல்ஸ் போன்றவை) தனியாக கணினி மூலமாக தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டது. இம்முறையில் கட்டுமானப் பொருட்கள் விரயமாவது 15% அளவிற்கு குறைக்கப்பட்டது. இது சுற்றுச்சுழல் பாதுகாப்பிற்கு உகந்தது. ஆனால் இந்த தொழில்நுட்பம் சுற்றுசூழலை மாசு படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு வலுவான கண்டனங்களை எதிர்கொண்டது.

RCC சாரம் கட்டுமானம்

RCC என்பது வலுவூட்டு சிமெண்ட் கான்கிரிட். RCC முறை மூலம் கட்டிடத்தின் பாகங்களை (அடுக்குகள், சுவர்கள், தூண்கள், அடித்தளம்) உருவாக்கலாம். இந்த முறை மூலம் வானளாவிய கட்டிடங்களை எழுப்பலாம். இது கட்டுமான செலவுகளையும், பொருட்களையும் வெகுவாக குறைக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்