இல்லங்களை அழகாக காட்டும் உள்ளங்கவர் தரை விரிப்புகள்

ஐந்தாவது சுவர் என்று சொல்லப்படும் தரைத்தளத்தை கார்ப்பெட் அமைத்து அலங்கரிப்பதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.;

Update:2023-07-29 09:26 IST

கார்ப்பெட் வகைகள் மெஷின் தயாரிப்பு, கைகளால் தயாரித்தது என்று இரண்டு வகை உண்டு. தற்போது சந்தையில் சிந்தடிக் கார்ப்பெட்டுகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. முன்னதாக அமைத்திருந்தாலும் அவற்றை தேவைக்கேற்ப மொத்தமாக மாற்றி கொள்ளலாம். மேலும், விருப்பமான டைல்ஸ் டிசைன் அமைப்பிலும் தேர்வு செய்ய இயலும். தரைத்தளம் மார்பிள் போன்று தோற்றமளிக்க வேண்டுமென்றால் அதற்கேற்ற டிசைனை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

 கார்ப்பெட் அமைப்பில் பர்னிச்சர்களின் நிறம், அறைச் சுவரின் நிறம், இதரப் பொருட்களின் நிறம் இவற்றுடன் ஒத்துப்போகும் விதத்தில் நல்ல நிறத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும். சதுரம், செவ்வகம், முட்டை வடிவம், வட்டம் என இடத்திற்கேற்ப போடலாம். முழுவதும் கம்பளியால் தயாரிக்கப்பட்ட கார்ப்பெட்டுகள் தரமாகவும், அழகாகவும் இருக்கும்.

சிந்தடிக் தரை விரிப்புகள்

பழைய வீடுகளின் உள்ள டைல்ஸ் வகைகளை மாற்றாமல் அவற்றை கார்ப்பெட் போட்டு மறைப்பதற்கேற்ப பி.வி.சி முதல் லினோலியம் வரையிலான தரை விரிப்புகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை புளோர் டு புளோர் என்ற வகையில் தரையோடு தரையாக ஒட்டி விடலாம். லினோலியம் போன்ற விரிப்புகள் ரோல் கணக்கில் இருப்பதால் அவற்றை வேண்டிய சதுரஅடி கணக்கில் வாங்கி பயன்படுத்தலாம். வேண்டாதபொழுது அவற்றைச் சுருட்டி வைத்து விடலாம். நான்-ஓவன் கார்ப்பெட்டுகளும் பிளைன் நிறங்களில் கிடைக்கின்றன. அறையின் அளவை கணக்கெடுத்து, சதுர அடி கணக்கில் போட்டு அலங்கரிக்கலாம்.

நான்-வூவன் கார்ப்பெட்டுகளில் சிவப்பு நிறம் உள்ளவற்றை மாடிப்படிகளுக்கு போடலாம். சணல் கார்ப்பெட் வகைகள் சந்தையில் பல வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. டைனிங் டேபிள் கீழ்ப்புறம், வராண்டா, பால்கனி ஆகிய இடங்களில் விரித்து அழகாக்கலாம். அவற்றை எளிதாக பராமரிக்க முடியும். வுல் கார்ப்பெட் ஓரங்களில் உள்ள குஞ்சங்களை சரியான அளவுகளில் வெட்டி விட்டால் பார்க்க அழகாயிருக்கும். சணல் கார்ப்பெட்டுகள் பல வண்ணங்களிலும், வட்ட வடிவிலும் கிடைக்கின்றன. டைனிங் டேபிள் அடியில், வராண்டா, பால்கனி போன்ற இடங்களில் அவற்றை அமைத்து அழகாக மாற்றலாம்.

உட்புற அமைப்பை கவனத்தில் கொள்க !

கார்ப்பெட் அமைக்கும்போது வரவேற்பறையில் உள்ள பொருட்களை மனதில் கொண்டு கொண்டு, நடுவில் எத்தனை சதுர அடி இடம் கிடைக்கும் கணக்கிட வேண்டும். சோபா, நாற்காலிகள் இவை போக மீதமிருக்கும் நடுப்பகுதியில் கார்ப்பெட் விரிக்கலாம். பொதுவாக கார்ப்பெட்டுகள் பிரவுன், சிவப்பு, பச்சை, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கின்றன. பர்னிச்சர்களின் நிறம், அறைச் சுவரின் நிறம், மற்ற பொருட்களின் நிறம் இவற்றுடன் ஒத்துப்போகும் விதத்தில், சதுரம், செவ்வகம், முட்டை வடிவம், வட்டம் என இடத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கலாம். கைகளால் நெய்யப்பட்டவை மிகவும் உறுதியாக இருக்கும்.

மேல் மாடிகளில் அமைத்த லான் கார்ப்பெட் ஓரங்களில் செடிகள் வைக்கலாம் விசேஷ நாட்களில் அவற்றை அலங்கரித்து சீரியல் செட் போடலாம். தனி வீடுகளில் கேட் முதல் தலைவாசல் வரை அமைத்து, இயற்கை செடிகளுடன் பசுமையான தோற்றத்தை அளிக்க முடியும். விசேஷ தினங்களில் ரெடிமேடு புல் தரை போன்ற அமைப்பை உருவாக்க வாங்கி வைத்துக்கொண்டு அவ்வப்போதுகூட பயன்படுத்திக்கொள்ளலாம்.

அடுக்கு மாடியில் உள்ளவர்கள் புல் தரை போன்ற லான் கார்ப்பெட் அமைக்கலாம். வராண்டா, அறையை ஒட்டி பால்கனி, சிட் அவுட் ஆகியவற்றை அளவெடுத்துக் கொண்டு போடலாம். அப்பகுதிகளில் வெறும் லான் கார்ப்பெட் மட்டும் போட்டு விடாமல், ஓரங்களில் அழகாக பெயிண்டிங் செய்த டெரகோட்டா தொட்டிகளை வைக்கலாம். மஞ்சள் பெயிண்டிங் செய்த தொட்டிகளுக்கும், பச்சை லான் கார்ப்பெட்டிற்கும் பொருத்தமாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்