வீட்டு அடித்தளத்தில் சிக்கல்கள் - தெரியப்படுத்தும் அறிகுறிகள்
ஒவ்வொருவருக்கும் சொந்தமான வீடு என்பது வாழ்க்கையின் மிகவும் முக்கியமான முதலீடாகவே பார்க்கப்படுகின்றது.வீட்டு அடித்தளம் சேதமடைந்தால் அது பல சிக்கல்களை ஏற்படுத்தி விடுகின்றது.வீட்டு அடித்தளத்தில் சிக்கல்கள் ஏற்படுவதை தெரியப்படுத்தும் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் அவற்றை எப்படி சரிப்படுத்துவது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.;
கான்கிரீட் கிராஸ்பீம்கள் மற்றும் பையர் மற்றும் ரே அடித்தளங்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் கடுமையான வீட்டு அடித்தள சிக்கல்களாக உருவாகலாம்.இதுபோன்று அடித்தளத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அவை அமைப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் பொருள்களும் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகின்றது.மண், தட்பவெப்பநிலை, பிளம்பிங் கசிவுகள், மோசமான மண் சுருக்கம் மற்றும் மோசமான அடித்தள வடிகால் உள்ளிட்ட பல்வேறு தாக்கங்களால் அடித்தளத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால், சிக்கலின் அறிகுறிகளைக் கண்டறிந்து அவற்றை சரி செய்வது நல்லது.
1. செங்கற்கள் மற்றும் சுவர்களில் ஏற்படும் விரிசல்
ஸ்லிப்அப் மேற்பரப்பு, ஆர்பர் அடித்தளம், மேற்பரப்பு சுவர்கள் போன்றவற்றில் விரிசல் ஏற்படுவது வீட்டின் அடித்தள சிக்கல்களின் அறிகுறிகளில் ஒன்றாகும்.அடித்தளம் அமைக்க பயன்படுத்தப்படும் பொருளின் தன்மை காரணமாக ஏற்படக்கூடிய ஆர்பர் அடித்தள விரிசல் மிகவும் அசாதாரணமானது அல்ல.விரிந்து சுருங்கக் கூடிய தன்மை கொண்ட மண்ணில் பிளவுகள் ஏற்படலாம்.மேலும் ¼" சிறிய விரிசல்கள் கூட உங்கள் வீட்டின் அடித்தளத்தில் ஏற்படக்கூடிய அழுத்தத்தைக் குறிக்கலாம்.வெளியில் துருத்திக்கொண்டிருக்கும் செங்கற்களும் கட்டிடத்தின் அஸ்திவாரத்தில் சிக்கல் இருப்பதற்கான அறிகுறியாகும்.சீலிங்கில் ஏற்படும் விரிசல்களும் அடித்தள சிக்கல்களை சுட்டிக்காட்டுபவையாக இருக்கும்.
2. இறுக்கமான கதவுகள் மற்றும் ஜன்னல்கள்
நம் வீட்டில் இருக்கும் கதவு மற்றும் ஜன்னல்களின் சட்டம் சீரற்றதாக மாறுவதற்கு வீட்டின் அடித்தளத்தில் இருக்கும் பிரச்சனைகளும் ஒரு காரணமாகும்.இதன் விளைவாக, அவற்றை திறப்பது அல்லது மேலே இழுப்பது போன்ற செயல்கள் மிகவும் கடினமாக இருக்கும். குறிப்பாக இரட்டை கதவுகளில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.எனவே அடித்தளத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தெரியப் படுத்தக்கூடிய அறிகுறிகளில் இவையும் ஒன்றாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
3. தளர்வுகள்
சில வீடுகளில் வீட்டின் உள்ளிருந்து படிக்கட்டுகள் அமைத்து ட்யூப்லெக்ஸ் பாணியில் மேல் தளத்தை அமைத்து இருப்பார்கள். இதுபோன்ற வீடுகளில் சிலர் மேல்தளத் தரைகளை முற்றிலுமாக மரத்தினால் அமைப்பது இப்பொழுது பிரபலமாக இருக்கின்றது.இதுபோன்ற வீடுகளில் அடித்தளத்தில் ஏற்படும் சிக்கல்கள் வெளிப்படையாக தெரிகின்றன. அதாவது கான்கிரீட் அல்லது மரத்தை கொண்டு அமைக்கப்படும் தரைகளில் ஏற்படும் தொய்வு கட்டமைப்பை பாதிக்கும் அடித்தள பிரச்சனைகளின் அறிகுறிகளைக் குறிப்பதாகும். சில சீரற்ற அடிப்பகுதிகளில் நடக்கும் பொழுது அதிரும் தன்மையை உணர முடியும், இது துணைத் தளத்தின் துணைக் கூறுகள், துணை நெடுவரிசைகள் மற்றும் காலம்கள் போன்றவற்றில் உள்ள சிக்கல்களைக் குறிக்கலாம்.சீரற்ற அடிப்பகுதிகள் ஒரு சிறிய பிரச்சனை போல் தோன்றினாலும் அவை முற்றிலும் வீங்கிய அடித்தளத்தின் தோல்விக்கு வழிவகுக்கக் கூடியதாக இருக்கும். இதன்பிறகு உங்கள் அடித்தளம் வீட்டின் முழு எடையையும் தாங்குவதற்கு ஏற்றதாக இருக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.பழைய வீட்டின் மேல் புதிய பகுதியை நிறுவுவது அல்லது புதிதாக ஒரு பகுதியைச் சேர்ப்பது போன்ற வீட்டிற்கு அதிக எடையைச் சேர்க்கும் எந்தவொரு அமைப்பிலும் ஈடுபடுவதற்கு முன்,வீட்டின் அடித்தளத்தை சரிபார்த்து பின்பு அந்த செயலைச் செய்யத் துவங்கலாம்.
4. தரை டைல்களில் ஏற்படும் விரிசல்
வீட்டு தரைகளில் அமைக்கப்படும் டைல்களில் ஏற்படும் விரிசல்களும் வீட்டின் அடித்தளத்தில் சிக்கல்கள் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளாக கூறப்படுகின்றது. எனவே டைல்களில் விரிசல்கள் ஏற்படும் பொழுது அவற்றை அலட்சியப்படுத்தாமல் அது எதனால் ஏற்படுகின்றது என்பதை முற்றிலும் ஆராய்ந்து தெரிந்து கொள்வது நல்லது.
5. ஈரமான சுவர்கள் மற்றும் கசிவுகள்
சில வீடுகளில் மழைக்காலத்தில் மட்டுமல்லாது அனைத்து பருவ காலங்களிலும் வீட்டின் சுவர்கள் எப்பொழுதும் ஈரமாக இருப்பதைப் பார்க்க முடியும். இதுமட்டுமல்லாமல் சில இடங்களில் நீர் கசிவும் இருந்துகொண்டே இருக்கும்.குறிப்பிடத்தக்க அதிகப்படியான ஈரப்பதம் கட்டமைப்பு சேதத்தை ஏற்படுத்தும்.வெளிப்புறத்தில் இருக்கும் நீர் அடித்தள விரிசல் வழியாகவும் வருவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.தண்ணீருடன் சம்மந்தமே இல்லாத இடத்திலும் நீர்க்கசிவு இருந்தால் அது கடுமையான பிரச்சனையின் அறிகுறியாகும்.தேவையற்ற ஈரப்பதம் பூச்சிகள் மற்றும் எலி, பெருச்சாளி போன்றவற்றை வரவேற்கத்தக்க பகுதியாக மாற்றுவதோடு வீடு சேதம் அடைவதற்கும் காரணமாக அமைந்துவிடும்.
6. வலுவான துர்நாற்றம்
வீட்டின் அறைகள் மற்றும் கதவுகளில் இருந்து ஒருவிதமான பூஞ்சைக் காளான் படிந்தால் ஏற்படக்கூடிய துர்நாற்றம் வீசினால் அதுவும் நம் வீட்டின் அடித்தளப் பிரச்சனைக்கு மற்றொரு காரணமாகும்.
7. வீட்டை விட்டு சுவர்கள் விலகி வருவது
வீட்டின் அலமாரிகள் மற்றும் கௌன்டர்கள் சுவர்களில் இருந்து பிரிக்கப்பட்டு விலகி வருவதும், மற்ற பகுதிகளிலிருந்து சுவர்கள் விலகி வருவது போல் இருப்பதும் வீட்டின் அடித்தளத்தில் பிரச்சனை இருப்பதற்கான காரணமாக கூறப்படுகின்றது.சுவருக்கும் அலமாரிக்கும் இடையில் இடைவெளி அதிகமாவது போல் தோன்றினால் அவற்றை உடனடியாக கவனிக்க வேண்டும். கதவு மற்றும் ஜன்னல் சட்டங்களைச் சுற்றிலும் இடைவெளி ஏற்பட்டாலும் அவற்றையும் கவனமாக கண்காணிக்க வேண்டும்.சுவர்கள் விலகி வரும்பொழுது வீடுகளின் கதவுகள் சரியாக பொருந்தாமல் அல்லது மூட முடியாமல் போகலாம்.இதுவும் அடித்தளத்தில் ஏற்பட்டிருக்கும் கடுமையான சேதத்தை நமக்கு தெரியப்படுத்தும் அறிகுறியாகும்.
8. வளைந்த அடித்தள சுவர்கள்
உங்கள் அடித்தளத்தில் உள்ள சுவர்கள் உள்நோக்கி இருக்கின்றனவா? அடித்தள சுவர்கள் வளைந்து இருப்பதே இதற்கு காரணமாகும். வீட்டின் அடியில் உள்ள மண், நீரை உறிஞ்சுவதால் விரிவடைந்து சுருங்கும்.இதனால் சுவர்களை நோக்கி விரிவடைவது மற்றும் தள்ளுவது போன்ற நிகழ்வுகள் ஏற்படும்.இத்துடன் மண்சரிவும் வீட்டின் அடித்தளத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாக கூறப்படுகின்றது.
9. மோசமான நீர் வடிகால்
வடிகால் பிரச்சினையில் கவனம் செலுத்துவது மிகவும் இன்றியமையாததாகும்.மழை இல்லாத நேரங்களில் மண்ணில் ஏதாவது நீர்க்கசிவு ஏற்படுகின்றதா என்பதை கண்டறிந்து அதனை உடனடியாக சரி பார்க்க வேண்டும்.குழாயில் விரிசல் அல்லது உடைப்பு ஏற்பட்டாலும் மண்ணில் நீர் கசிவு ஏற்படும்.மோசமான நீர் வடிகால் பிரச்சனையும் வீட்டு அடித்தளத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகின்றது.