நகரும் படிக்கட்டுகள் - எலிவேட்டர், லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்

Update: 2023-06-03 00:33 GMT

நகர்படி என்பது மக்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்லும் ஒரு முறையாகும். இது சாதாரண படிக்கட்டுகள் போல் இருக்கும். படிகள் நகர்ந்து கொண்டே இருக்கும். படிக்கட்டுகள் அனைத்தும் உலோகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுருக்கும்.

விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பல அடுக்குமாடி கட்டிடங்கள் முக்கியமாக வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் இது போன்ற நகரும்படிகள் இன்னொரு தளத்தில் இருந்து மற்றொரு தளத்திற்கு மக்களை தூக்கி செல்கிறது.

எலிவேட்டர் மற்றும் லிஃப்ட் இரண்டும் ஒரு கட்டடத்திற்கு உள்ளே ஒரு தளத்திலிருந்து மேலே உள்ள அனைத்து தளத்திற்கும் மக்களை சுமந்து செல்லும் ஒரு நவீன முறையாகும். எலிவேட்டர் கார்களை கீழிருந்து இருந்து மேலாகவும் பக்கவாட்டிலும் இன்னொரு தளத்திற்கும் தூக்கி செல்கிறது.

எலிவேட்டர் கனமான பொருட்களையும் கனமான கார் போன்ற வாகனங்களையும் மக்களையும் ஒரு தளத்திலிருந்து அதே கட்டிடத்துக்குள் உள்ள மற்றொரு எந்த தளத்திற்கும் எடுத்துச் செல்ல உதவுகிறது. இது எஸ்கலேட்டர் போன்ற படிக்கட்டு முறையில் இல்லாமல் தளம் மற்றும் அறைகள் போன்று இருக்கும்.

எலிவேட்டர் மற்றும் லிப்ட்கள் அனைத்து கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் முக்கியமாக தேவைப்படுகிறது. கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பே லிஃப்ட் மற்றும் எலிவேட்டர் அமைப்பது பற்றி ஆய்வு செய்து கொள்ள வேண்டும்.

அப்போதுதான் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான கனமான பொருட்களை கீழிருந்து மேலாக எடுத்துச் செல்வதற்கு எளிதாக இருக்கும். எலிவேட்டர்கள் கனமான கேபிள் போன்ற எஃகு கம்பிகளால் ஆனது. சில நூறு கிலோமீட்டர் வரைக்கும் மேலே செல்லவும் கீழே செல்லவும் இயலும்.

அதனால் தான் அதிகபட்ச உயரத்திற்கு செல்வதற்கு லிப்ட்டுகள் முறையை கையாண்டனர். லிப்ட்கள் குறைந்த நேரத்தில் அதிவேகமாக பயணிக்க கூடியது. லிப்ட்டுகள் டபுள் டெக்கர் மற்றும் மினிஸ் ஸ்பேஸ் லிப்ட்டுகள் அதிவேகமான பயணிக்கும் மிக சிறந்த தொழில்நுட்பங்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

எலிவேட்டர்கள் கட்டுமான பணிகளுக்கு பெரும் உதவியாக உள்ளது. எலிவேட்டர்கள் பொதுவாக வணிக வளாகங்களில் பார்க்கிங் ஏரியாவில் கார்களை ஏற்றி இறக்கும் இடத்தில் பெரும்பங்கு வைக்கிறது.

லிப்ட்கள் மிக பெரிய வணிக வளாகங்களிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள கட்டிடங்களிலும் பயன்படுகிறது. இவை அனைத்தும் மின்சார உதவியுடன் மோட்டார்கள் உதவியுடனும் இயங்குகின்றன.

மருத்துவமனைகளில் இந்த லிப்ட்டுகள் நோயாளிகளுக்கு ஒரு பெரும் வரப் பிரசாதம் ஆகும். அங்கு பணிபுரிபவர்களுக்கும் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் லிஃப்ட்கள் பெரும் உதவியாக உள்ளது.

ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு வேகமாகவும் பாதுகாப்பாகவும் சிரமம் இல்லாமல் நோயாளிகளைக் கூட்டி செல்வதற்கு இந்த லிப்ட்டுகள் பெரும்பங்கு வைக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கும் வயதானவர்களுக்கும் இது பெரும் ஆதரவாக உள்ளது.

பழங்காலங்களில் தாழ்வான தளங்களில் இருந்து ஸ்ட்ரக்சரில் வைத்து நோயாளிகளை இழுத்தும் தள்ளியும் பலமாடி உயரங்களுக்கு கொண்டு செல்வதுண்டு. ஆனால் இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்கள் சிரமம் இல்லாமல் அதி வேகமாகவும் சுலபமாகவும் மேலே ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மிகுந்த பயன் அளிப்பதாக உள்ளது.

லிப்ட்டுகள் இயங்கும்போது மின்சாரம் தடையில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு மின்சாரம் தடை ஏற்படும் போது மின்சார பேக்கப் என்று சொல்லும் இன்வெர்ட்டர் யுபிஎஸ் இவைகளும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

லிப்ட்கள் உபயோகிக்கும் போது அலாரங்கள், எமர்ஜென்சி விளக்குகள் மற்றும் கைபேசிகள், தொலைபேசிகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். சில இடங்களில் மின்சார வசதி துண்டிக்கும் பொழுது கணினி முறையிலும் அவைகள் இயக்கப்படுகின்றன.

அவற்றையும் நாம் முன்னெச்சரிக்கையாக சரியாக உள்ளதா என்பதை எப்போதும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். திடீரென மின்தடை ஏற்படும் பொழுது மக்களை எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்பதை முன்பே திட்டமிடுதல் அவசியம் ஆகும்.

இது போன்ற திடிரென வரும் இக்கட்டான சூழலில் நாம் முன்பே பாதுகாப்பு காரணிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தரமான உயர்ந்த பாதுகாப்பான சாதனங்களைக் கொண்டு இது போன்ற எலிவேட்டர் மட்டும் லிப்டகளை உருவாக்குதல் மிகவும் முக்கியமாகும்.

வளர்ந்து வரும் அதிநவீன தொழில்நுட்ப காலகட்டங்களில் கட்டுமான பணிகளில் இதுபோன்ற வசதிகள் இருப்பது தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தை குறிப்பதுடன் மக்களின் வேலைகளையும் எளிதாக முடிக்க உதவியாக உள்ளது.

இது போன்ற புதிய தொழில்நுட்பங்கள் நேரத்தை வெகுவாக குறைப்பதுடன் நமது ஆற்றலையும் பாதுகாக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்