வீட்டை அலங்கரிக்கும் திரைச்சீலைகள்

ஒரு வீடு அழகாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதற்கு திரைச்சீலைகளும்ஒரு காரணமாக இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.ஜன்னல்களை மறைப்பதற்கு மட்டுமல்லாமல் வீட்டை அழகுபடுத்தவும் டிரேப்ஸ் மற்றும் கர்ட்டன்கள் பயன்படுத்தப்படுகின்றன.. ஜன்னல்களை திரையிட்டு மறைக்கும் பொழுது வீட்டிற்குள் வெப்பம் வருவது தடுக்கப்பட்டு,வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகின்றது.;

Update: 2022-07-23 01:29 GMT

வீடுகள், அறைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு திரைச்சீலைகளை பயன்படுத்தும்பொழுது ஒரு இனிமையான, அழகான தோற்றத்தை அவை தருகின்றன.. வரவேற்பறைகள் பெரியதாக இருக்கும் பொழுது அவற்றிற்கு போடப்படும் திரைச்சீலைகள் அந்த அறைக்கு பிரம்மாண்டமான தோற்றத்தைத் தருகின்றன.. திறந்தவெளியாக இருக்கும் இடங்களை திரைச்சீலைகளை கொண்டு மறைக்கும் பொழுது அந்த இடம் மிகவும் வண்ணமயமாக, பயன்படுத்த வசதியாக மற்றும் துடிப்பான தோற்றத்தை தருவதாக இருக்கின்றன.

திரைச்சீலைகளை டிரேப்ஸ் மற்றும் கர்ட்டன்கள் என்று வகைப்படுத்துகிறார்கள்.. இவை இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை பார்க்கலாம். ஆசிய நாடுகளில், பெரும்பாலான மக்கள் திரைச்சீலைகளை (கர்ட்டன்கள்) என்றும் மேற்கத்திய நாடுகளில் திரைச்சீலைகளை(டிரேப்ஸ்) என்றும் அழைக்கிறார்கள்.. ஆனால்,டிரேப்ஸ் மற்றும் கர்ட்டன்கள் ஸ்டைல், மெட்டீரியல், பேட்டர்ன், நீளம் போன்ற பல்வேறு அம்சங்களில் சற்று வித்தியாசமாக இருக்கின்றன.

டிரேப்ஸ்

டிரேப்ஸ் என்பது துணி மற்றும் திடமான ஒரு பொருளால் ஜன்னல் மற்றும் அறைகளை மூடுவதற்கான திரைச்சீலை என்று சொல்லலாம்.இவற்றின் விலை அதிகமாக இருப்பதுபோலவே இவற்றை உபயோகிக்கும் பொழுது அந்த அறையின் தோற்றமும் மிகவும் ரிச்சாகவும், கம்பீரமான தோற்றத்துடனும் இருக்கும். .மேலும் இவை திரைச்சீலை பேனல்(ட்ரேப்பரி பேனல்) மற்றும் ஜன்னல் திரைச்சீலை (விண்டோ ட்ரேப்பரி) என்ற பெயர்களால் பிரபலமாக அறியப்படுகின்றது.சூரிய ஒளி, வெளிப்புற இயற்கை காட்சி மற்றும் காற்று உள்ளே நுழைவதைத் தடுக்க விரும்பும் இடங்களில் டிரேப்ஸ் பயன்படுத்தப் படுகின்றன..

மேல் பக்கத்தில் சுருக்கம் மற்றும் கொசுவங்கள் வைக்கப்பட்டு கீழே இறங்கும் பொழுது ஒரு திரைச்சீலைக்கான சரியான அமைப்பை கொடுக்கக்கூடியவை என்று டிரேப்ஸ்ஸைக் கூறலாம். இவை ராடுகள் மற்றும் வளையங்களில் தொங்க விடப்படுவது போல் பல்வேறு வகைகளில் கிடைக்கின்றன.நம்முடைய வீடு அல்லது அறையின் உள் அலங்காரம் மற்றும் வண்ணத்திற்கு ஏற்ப அல்லது தோற்றத்திற்கு ஏற்ப டிரேப்ஸ்களைத் தேர்வு செய்யலாம்.

வெல்வெட், பட்டு மற்றும் அடர்த்தியான ,கனமான துணிகளால் இவை எப்பொழுதுமே தைக்கப்படுகின்றன.இவை பெரும்பாலும் கதவு அல்லது ஜன்னல்களின் மேலிருந்து தரையைத் தொடும் அளவுக்கு நீண்டிருக்கும். ட்ரை கிளீன் அல்லது ஸ்டீம் கிளீன் முறையில் இவை எளிதாக சுத்தம் செய்யப்படுகின்றன..இவற்றைக் கொண்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடியிருக்கும் பொழுது முற்றிலுமாக வெளியில் இருக்கும் காட்சிகளை பார்க்க முடியாது.. அதேபோல்,அறைக்குள் வரும் சூரிய ஒளி மற்றும் காற்றை முழுமையாக தடுக்கவும் இவை பயன்படுகின்றன.

டிரேப்ஸ் வகைகள்

ப்ளீட் டிரேப்ஸ், பென்சில் ப்ளீட் டிரேப்ஸ், டக்ஸிடோ ப்ளீட் டிரேப்ஸ், பாக்ஸ் ப்ளீட் டிரேப்ஸ், ராட் பாக்கெட் டிரேப்ஸ், டேப் டாப் டிரேப்ஸ், பேக் டேப் டிரேப்ஸ், குரோமெட் டிரேப்ஸ், பின்ச் டிரேப்ஸ், இன்வெர்ட்டட் பாக்ஸ் டிரேப்ஸ், கார்ட்ரிஜ் ப்ளீட் டிரேப்ஸ்

கர்ட்டன்ஸ்

ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மறைப்பதற்காக துணிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் திரைச்சீலைகளை கர்ட்டன்ஸ் என்று அழைக்கிறார்கள்..இவ்வகை திரைச்சீலைகள் பல்வேறு வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் அளவுகளில் வருகின்றன.கர்ட்டன் என்பது ஒரு வகை அறை அலங்காரப் பொருள் என்று வரையறுக்கப்படுகிறது.

கர்ட்டன்கள் இரும்பு, ஸ்டீல் மற்றும் ஃபைபர் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட தண்டுகளில் கொக்கிகளைக் கொண்டு தொங்க விடப்படுகின்றன..இவ்வாறு தண்டுகளில் திரைச்சீலைகளத் தொங்கவிடும் பொழுது அவற்றை திறப்பதும் மூடுவதும் மிகவும் எளிதாக இருக்கின்றது.. இதில் பயன்படுத்தப்படும் கொக்கிகள் திரைச்சீலையை சரியான நிலையில் வைத்திருக்க உதவுகின்றன.

துணியால் தைக்கப்பட்ட திரைச்சீலைகளை துவைப்பதும் எளிது. வீடு அல்லது அறையை வடிவமைக்கும்போது திரைச்சீலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.. திரைச்சீலைகளின் நிறம், வடிவமைப்பு மற்றும் துணி ஆகியவை அவை உபயோகப்படுத்தக்கூடிய அறையின் ஒட்டுமொத்த தோற்றத்தை உயிரோட்டம் உள்ளதாக மாற்றுகின்றன.

திரைச்சீலைகள் பெரும்பாலும் ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. திரைச்சீலைகள் அறைக்குள் வரும் காற்றை முழுவதுமாக தடுத்து நிறுத்தாது. அதேசமயம் , வீட்டிற்குள் அதிகப்படியான வெப்பம் வருவதைத் தடுத்து நிறுத்தும்.

இலகுவான லினன், காட்டன் மற்றும் பாலியஸ்டர் துணிகளால் இவை தைக்கப்படுகின்றன. இவ்வகை திரைச்சீலைகள் ஜன்னல்கள் அல்லது கதவுகளின் அளவுக்கு மட்டுமே தைக்கப்படுகின்றன.கைகளால் இவற்றை எளிதாக துவைத்து விட முடியும். அறைக்குள் வரும் சூரிய ஒளி மற்றும் காற்றை இவை முழுமையாக தடுக்காது.அதேபோல், அறைக்கு வெளியில் இருக்கும் காட்சிகளை முற்றிலுமாக இல்லாமல் ஓரளவு பார்க்க முடியும்.

கர்ட்டன்ஸ் வகைகள்

ராட் பாக்கெட் கர்ட்டன்ஸ், காப்லட் ப்ளீட்டட் கர்ட்டன்ஸ், பாக்ஸ் ப்ளீட்டட் கர்ட்டன்ஸ், வேவேலன்ஸ் கர்ட்டன்ஸ், பின்ச் ப்ளீட்டட் கர்ட்டன்ஸ், ஆஸ்டிரியன் கர்ட்டன்ஸ், விண்டோ ஸ்கார்ஃப், ஸ்வேக்ஸ், சிங்கிள் பேனல் கர்ட்டன்ஸ், பேர்பேனல் கர்ட்டன்ஸ், ஷீர் கர்ட்டன்ஸ், செமி ஷீர் கர்ட்டன்ஸ்.

Tags:    

மேலும் செய்திகள்