பிட்டுமன் மேல் பூச்சு - நீர் ஊடுருவல் தடுப்பு முறை

நீர் மற்றும் ஈரப்பதத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு மேற்கொள்ளும் முறைக்கு பெயர் நீர் ஊடுருவல் தடுப்பாகும். இந்த நீர் ஊடுருவல் தடுப்பு முறை, பொதுவாக, நீர் மற்றும் ஈரப்பதம் இருந்தால் செயல் பட முடியாத கட்டமைப்புகளில் பயன்படுத்தப்படும். Bitumen (பிச்சுக் கட்டி) மேல் பூச்சு முறை 5000-4000 பிசியில் இருந்து பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது, நவீன தொழிற்சாலைகளின் வளர்ச்சி காரணமாக இந்த பிச்சுக்கட்டி மேல் பூச்சு முறையின் முக்கியத்துவம் வெகுவாக அதிகரித்துள்ளது.;

Update:2022-09-24 08:42 IST

இது பிசுபிசுப்பு தன்மை கொண்ட கரிய நிறப் பொருளாகும்; அதிக நச்சு தன்மை கொண்ட அரை திடமான பெட்ரோலியம் ஆகும். இதில் ஹைடிரோகார்பன்(hydrocarban) அதிகம் உள்ளது; தண்ணீரை தடுக்கும் ஆற்றல் கொண்டது; அதனால் நீர் ஊடுருவல் தடுப்பாக இது பயன் படுத்தப் படுகிறது. இதனுடன் பாலிமோர்(polymer) சேர்த்து, தரத்தை உயர்த்தி கட்டிட தொழிற்சாலையில் பயன்படுத்தப் படுகிறது. Bitumen உற்பத்தியில் 70% சாலை கட்டுமானத்திற்கு பயன்படுத்தபடுகிறது. மீதி சதவிகிதம் முத்திரை (sealing ), மின்காப்பு (insulating) மற்றும் நீர் ஊடுருவல் தடுப்புக்கு பயன்படுத்தப் படுகிறது.

பிட்டுமன், ஒரு நீர் ஊடுருவல் தடுப்பு பூச்சு

கான் கிரிட்டை, நீர், ஈரப்பதம் மற்றும் கரையக்கூடிய உப்பு தாக்கி, அதன் உள்ளிருக்கும் ஸ்டீல் கம்பிகளை சேதப்படுத்தாமல் இருப்பதற்காக நீர் ஊடுருவல் தடுப்பு முறை பயன்படுத்தப்படுகிறது. சீதோஷண நிலைகள் கட்டிடங்களை பாதிக்காத வண்ணம் இது பாதுகாக்கிறது. மேல் பூச்சாக இதை பயன்படுத்தும் போது பெயிண்ட்டாக திரவ நிலையில் பயன்படுத்தப் படுகிறது. கூரைகளில் மேல் பூச்சாக பயன்படுத்தப்படும் Bituminous பெயிண்ட்களும் உள்ளன.

இயற்கையாகவே பிட்டுமன் நீரில் கரையாதது. நிலத்தின் அடியிலும் பயன்படுத்தலாம். இதனோடு வேறு சில பொருட்கள் சேர்த்து கட்டிடங்களுக்கு மேல் பூச்சாக பயன்படுத்தும் போது, புற ஊதா கதிர்கள், ரசாயனங்கள்,காற்று மற்றும் காற்றின் ஈரத் தன்மை கட்டிடங்களை பாதிக்காத வண்ணம் பாதுகாக்கிறது. இது நீடித்து நிலைக்கக் கூடியது; செலவும் குறைவானது.

பிட்டுமன் பெயிண்ட் பெரும்பாலான பொருட்கள் மீது மேல் பூச்சாக பயன்படுத்தலாம். உதாரணமாக,இரும்பு,ஸ்டீல்,துத்தநாகம், ஈயம்,அலுமினியம்,கான்கிரிட் மற்றும் பிளாஸ்டிக். கடுமையான சீதோஷண நிலைகளிலிருந்து படிக்கட்டுகள், வேலி, நீர் தொட்டி, கேட் மற்றும் ஏணி இவற்றை பாதுகாக்க இந்த பெயிண்ட்டை மேல் பூச்சாக பயன்படுத்தலாம். இது பெயிண்ட்டாக கிடைப்பதால் பிரஷ் அல்லது ஸ்பிரேயர் (தெளிப்பான்) கொண்டு கைகளாலேயே பூசலாம். இதை பூசுவதற்கு முன் பூசப்படும் மேல் பரப்பு சுத்தமா இருக்க வேண்டும்.

இதனோடு பாலிமர் (Polymer ) கலந்த பூச்சு

பாலிமர் நெகிழ்வுத் தன்மை கொண்டது. பிட்டுமன்னோடு பாலிமர் சேர்க்கும் மேலும் நெகிழுவுத்தன்மை அடைகிறது. நீர் ஊடுருவலை தடுக்கும் வலிமையான தடுப்பாக மாறுகிறது. பாலிமரோடு கலந்த பிட்டுமன் பூச்சு, பாலங்களில் உள்ள நடைபாதைகள், தொழிற்சாலைகளில் உள்ள கழுவும் அறைகள், குழாய்கள், சாக்கடைகள், துறைமுகங்கள், நீர் தொட்டிகள் போன்ற நீர் நிறைந்த பகுதிகளில் பயன்படுத்தப் படுகிறது.

மேலும் இந்த பூச்சு, கட்டமைப்புக்கள் நகர்வினால் ஏற்படும் விரிசலை தடுக்கிறது; -25 லிருந்து 100 டிகிரி சென்டிகிரேட் வரை தாங்க கூடியது; புற ஊதா கதிர்களை தங்க கூடிய ஆற்றல் பெற்றது. நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடியது. இயற்கையாகவே ஓட்டும் தன்மை, நெகிழ்வு தன்மை இருப்பதால், இதை பூசியதும் மேடு பள்ளம் இன்றி சீராக பரவி நன்றாக ஒட்டிக்கொள்ளும். பிட்டுமன் பாலிமர் பூச்சு சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதது.

Tags:    

மேலும் செய்திகள்