வீட்டிற்கு அழகும் ஆரோக்கியமும் - களிமண் ஓடுகள்

Update: 2023-03-18 03:46 GMT

களிமண் ஓடுகள் கொண்ட வீடுகளை நாம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் அதிக அளவில் கேரளாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் அதிகம் பார்க்க முடியும். ஓடுகள் வேய்ந்த வீடுகள் பார்ப்பதற்கு அழகாகவும் நம் கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் தட்பவெட்ப சூழலின் ஆரோக்கியத்தையும் காக்கக்கூடியதின் ஓர் அடையாளம் எனலாம். களிமண் ஓடுகள் உபயோகப்படுத்தப்பட காரணம்,

இந்தியாவில் களிமண் இயற்கையாகவே அதிக அளவில் இருந்து வந்தது தான். மேலும் அதிகப்படியான வெயில் சுட்டெரிக்கும் காலங்களிலும் மழை காலங்களிலும் பனிக்காலங்களிலும் வீட்டிற்கு உகந்த தட்பவெப்பத்தை கொடுக்கக் கூடியதாக இந்த ஓடுகள் இருந்ததுதான். களிமண் கொண்டு செய்யப்படும் செங்கல் ஓடுகள் மற்றும் சுவர்கள் பல காலங்களுக்கும் நீடித்து நிலைக்க கூடியவை. இதில் களிமண் ஓடுகள் நூற்றாண்டுகளைக் கடந்து சேதம் இன்றி கம்பீரமாக நிற்கக்கூடிய அம்சங்களை கொண்டது என்பது வியக்கத்தக்கது. களிமண் ஓடுகளை உபயோகிப்பதற்கான நல்ல அம்சங்களை பற்றி காண்போம்.

தோற்றத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் களிமண் ஓடுகள்

ஒரு புறம் வளைந்தும் மறுபுறம் நேராகவும் இருக்கக்கூடியவை. எந்தவிதமான தட்பவெப்ப சூழலிலும் இந்த ஓடுகள் வளைவதோ நிமிருவதோ இல்லை. தன்னுடைய தோற்றத்தை எத்தனை வருடமானாலும் அப்படியே வைத்திருக்கக் கூடியவை. இதில் தேய்மானங்களோ விரிசல்களோ ஏற்படுவதும் இல்லை கடற்கரை ஓரங்களில் கட்டப்படும் வீடுகளில் உப்பு காற்றினாலும் சில இடங்களில் உப்பு நீரினாலும் அங்குள்ள பல பொருட்கள் சேதம் அடையும் மற்றும் துருப்பிடிக்கலாம். ஆனால் இந்த மாதிரியான எந்த பாதிப்பும் களிமண் ஓடுகளில் இல்லை.

Tags:    

மேலும் செய்திகள்