கான்கிரீட்டில் நவீன தொழில்நுட்பம்

கட்டுமானத்துறையின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்று “செல்ஃப்ஹீலிங்” காங்கிரீட்டை குறிப்பிடலாம்.;

Update:2022-04-30 22:35 IST
இத்தகைய தொழில்நுட்பத்தினால் கட்டப்படும் கட்டுமானங்களில் ஏற்படும் பிரச்சனைகளை எளிதாக தீர்க்க முடியும். கட்டிடத்தின் அடித்தளங்கள், பாலங்கள், அணைகள், தடுப்புச் சுவர்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் போன்ற அனைத்து கட்டமைப்புகளும் கான்கிரீட் எனப்படும் முதன்மையான பொருளைக் கொண்டே செய்யப்படுகின்றது.கான்கிரீட்டில் அதிகப்படியான அதிர்வுகள் ஏற்படும் பொழுது விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

செல்ஃப்ஹீலிங் கான்கிரீட் என்பது ஹீலிங் ஏஜென்ட் அல்லது பாக்டீரியாவைக் கலந்து தயாரிக்கப்படுகிறது.இந்த பாக்டீரியாவானது உயிரியல் ரீதியாக சுண்ணாம்புக் கல்லை உருவாக்குகிறது.சில தேர்ந்தெடுக்கப்பட்ட பேசிலஸ் வகை பாக்டீரியாக்களால் மட்டுமே சுண்ணாம்புக் கல்லை உருவாக்க முடியும்.கால்சியம் லாக் டேட் எனப்படும் கால்சியம் அடிப்படையிலான ஊட்டச்சத்துடன் நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை கான்கிரீட் தயாரிக்கும் பொழுது அத்துடன் கலக்கப்படுகின்றன. இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்டீரியாக்கள் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கான்கிரீட்டில் உயிருடன் இருக்கும் என்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கின்றது. இந்த செல்ஃப்ஹீலிங் கான்கிரீட்டில் சேதம் அல்லது விரிசல் ஏற்படும் பொழுது அதன் வழியாக நீர்க் கசிவு ஏற்படுகின்றது..இதில் இருக்கும் பாக்டீரியாக்கள் விரிசல்கள் வழியாக கசிகின்ற நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களுடன் தொடர்பு கொண்டு செயல்படத் துவங்குகின்றன.. இவ்வாறு செயல்படத் துவங்கும் பாக்டீரியாக்கள் கான்கிரீட்டில் இருக்கும் கால்சியம் லாக்டேட்டை உண்ணத் தொடங்குகின்றன..பாக்டீரியாக்கள் இதனை உட்கொண்டு கரையக்கூடிய கால்சியம் லாக்டேட்டை கரையாத சுண்ணாம்புக் கல்லாக மாற்றுகிறது. காற்றுடன் தொடர்பு கொள்ளும்போது சுண்ணாம்புக்கல் திடப்படுத்தப்பட்டு,அதன்மூலம் அந்த விரிசல்கள் தானாகவே மூடிக் கொள்ள உதவுகிறது.இந்த பாக்டீரியா செயல்பாடு அனைத்து ஆக்சிஜனையும் உட்கொள்வதால் கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் எஃகு வலுவூட்டப்பட்டு கட்டுமானங்களின் நீடித்த தன்மையை அதிகரிக்கிறது.

சாதாரண கான்கிரீட்டுடன் ஒப்பிடுகையில் இது சிறந்த சுருக்க மற்றும் நெகிழ்வு வலிமையைக் கொண்டுள்ளது.எந்த வெளிப்புற சிகிச்சையும் இல்லாமல் கான்கிரீட்டில் விரிசல் ஏற்படும் பொழுது தானாகவே சுயமாக குணப்படுத்திக் கொள்ளும் தன்மையைக் கொண்டுள்ளது.இதில் பயன்படுத்தப்படும் பாக்டீரியாக்கள் மனித உயிருக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாதவை எனவே அதை திறம்பட பயன்படுத்தலாம்.

மேலும் செய்திகள்