ட்ரோன்களின் பங்களிப்பு - கட்டுமானத்துறையில்

பெரிய கட்டுமானங்களில் ஒரு கட்டிடத்தில் நடைபெறும் நிகழ்வு மற்றும் வேலைகளை மற்றொரு கட்டிடத்தில் இருக்கும் கட்டுமானப் பொறியாளர் மற்றும் அங்கு இருப்பவர்களுக்கு உடனுக்குடன் வீடியோ காட்சிகளாக தெரியப்படுத்துவதில் ட்ரோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

Update: 2022-03-26 16:53 GMT
இவற்றின் வான்வழிப் பார்வையானது ஆன்சைட் பாதுகாப்பு முதல் தொலைநிலை கண்காணிப்பு வரை அனைத்திலும் தனது பங்களிப்பின் மூலம் சிறந்த பலன்களை வழங்குகிறது.குறிப்பாக, ட்ரோன் தொழில்நுட்பமானது முழு திட்ட வாழ்க்கை சுழற்சியிலும் தொடக்கம் முதல் முடிவு வரை அதிக நன்மைகளை வழங்குகின்றது.

ட்ரோன் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் படங்கள் ஆகியவை திட்டங்களை கண்டறியவும் கட்டிடத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும் மற்றும் நிகழ்நேர புதுப்பிப்புகளை வழங்கவும் பயன்படுத்தப்படுகின்றன .

தொழில் வளர்ச்சி மற்றும் கட்டுமானத் திட்டங்கள் அதிக அளவில் இருக்கும் பொழுது கட்டுமானத்தில் ட்ரோன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது..இந்த சாதனங்கள் தொழில்துறையில் மிகச்சிறந்த முன்னேற்றங்களை கொண்டுவரும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இவற்றின் நிகழ்நேரப் பதிவு மற்றும் தனித்துவமான வான்வழி பார்வையினால் ஏற்படும் நன்மைகள் என்று எடுத்துக் கொண்டால் செய்யப்படும் வேலையின் செயல்திறனை மேம்படுத்துகின்றன, அந்த வேலைக்கு ஆகும் செலவை குறைக்கின்றன மற்றும் பணியில் ஏற்படும் போக்கை நெறிப்படுத்துகின்றன.

ஃபிக்ஸட்- விங் ட்ரோன்,ரோட்டரி ட்ரோன் ஆகியவை கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களாகும்.

கேமராக்கள், ஜிபிஎஸ் அலகுகள், தெர்மல்சென்சார்கள் மற்றும் அகச்சிவப்பு சென்சார்கள் உள்ளிட்ட கட்டிடங்களில் உள்ள முக்கிய தரவை கைப்பற்ற உதவும் பல அம்சங்களுடன் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.கட்டுமான தளங்களிலிருந்து சேகரிக்கும் தகவல்கள் ட்ரோன் மென்பொருள் மூலம் கணினிக்கு அனுப்பப்பட்டு, சேகரிக்கப்பட்ட தரவை பகுப்பாய்வு செய்யவும், விளக்கவும், ஒழுங்கமைக்கவும் பயனர்களை அனுமதிக்கிறது. இந்த அம்சங்கள் நிர்வாகத்தின் செயல் திறனை மேம்படுத்தி மேலும் முழுமையான ஆய்வுகளைச் செய்ய அனுமதிக்கின்றன.

கட்டுமானத்தில் ட்ரோன்கள்

நிலப்பரப்பு வரைபடம் மற்றும் நில ஆய்வுகள்: பெரிய அளவிலான, சிக்கலான கட்டுமான திட்டங்களை திட்டமிடும்போது, நிலப்பரப்பு வரைபடங்களை கலந்தாலோசிப்பது அவசியமாகின்றது..நிலப்பரப்பு வரைபடங்கள் கட்டுமானத்திற்கு உதவியாக இருந்தாலும் அவற்றை தயாரிப்பதற்கு ஆகும் செலவும் நேரமும் அதிகம் என்று சொல்லலாம்..இது போன்ற சந்தர்ப்பங்களில் பரந்த அளவிலான நிலத்தை வரைபடமாக்கும் திறன் காரணமாகவும், நிலப்பரப்பை காட்சிப்படுத்த செலவிடும் நேரத்தை அதிகமாக குறைப்பதன் காரணமாகவும் ட்ரோன்கள் கட்டுமான தளங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் கட்டுமானத் திட்டத்தை ஒரு கால அட்டவணைக்குள் வைத்திருக்கவும்,கட்டுமானம் தொடங்குவதற்கு முன் அதன் துல்லியத்தை உறுதி செய்யவும் உதவுகின்றன..இவ்வாறு தகவலை சேகரிப்பது அதிலிருக்கும் சாத்தியக்கூறுகளை தீர்மானிக்கவும், அதன் வடிவமைப்பிற்கு உதவவும் பெருமளவில் உதவி செய்கின்றது..இதுமட்டுமல்லாமல், ட்ரோன்களால் தயாரிக்கப்படும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை முப்பரிமாண மாடல்களில் கையாள முடியும்,மேலும் கட்டுமானம் தொடங்குவதற்கு முன் கட்டுமானத்தில் ஏற்படும் சவால்களைக் கண்டறிந்து அதில் இருக்கும் தவறுகளை உடனுக்குடன் சரிசெய்து நேரத்தையும், பணத்தையும் கட்டுமான குழுவினருக்கு மிச்சப்படுத்துவதில் உதவுகின்றது.

உபகரணங்கள் கண்காணிப்பு: ஒவ்வொரு வேலை தளத்திலும் உபகரணங்கள் எங்கு உள்ளது என்பதை கண்காணிப்பது கிட்டத்தட்ட ஒவ்வொரு திட்ட மேலாளரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாக உள்ளது..அதேபோல் கட்டுமான தளத்தில் ஒரு கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள உபகரணம்,உபகரண செயலிழப்பு மற்றும் செய்யப்பட்டுள்ள வேலைகளையும் மேலாளர் இருக்கும் இடத்திலிருந்தே ட்ரோன்களின் ரெக்கார்டிங் செயல்பாடு,சிக்கல்களை தொலைவிலிருந்து அடையாளம் காட்டுவது, அந்தச் சிக்கல்களை தொடர்புகொள்ள உதவும் காட்சிப் படங்களை வழங்குவது போன்றவற்றை பயன்படுத்தி கண்காணித்து சரிசெய்ய முடியும்.. அதேபோல், அங்கிருக்கும் இயந்திரத்தை இயக்குபவர் பணியிடத்திற்கு செல்வதற்கு முன்பே இயந்திரத்தில் இருக்கும் பிரச்சனைகளை துல்லியமாக கண்டறிந்து தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு டிரோன்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட தரவை அனுப்பி இயந்திரத்தை பழுது பார்க்க முடியும்.

தொலைநிலை கண்காணிப்பு மற்றும் அறிக்கைகள்:ட்ரோன்கள் மூலம் எடுக்கப்படும் வான்வழி காட்சிகளை வாடிக்கையாளர்களுக்கு காட்டுவதன் மூலம் கட்டுமான திட்டத்தின் முன்னேற்றத்தை பற்றிய புரிதலை அவர்களுக்கு வழங்க முடியும்..தேவையான தகவல்களை ஒவ்வொரு குழுவுக்கும் மென்பொருள் மூலம் அனுப்பி பொறியாளர்கள், கட்டுமான மேலாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் தரவை பார்ப்பதற்கு இவை பெரிதும் உதவுகின்றன.

பாதுகாப்பு கண்காணிப்பு:.ஒரு ட்ரோன் ஆப்ரேட்டர் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் உபகரணமானது பாதுகாப்பான இடத்தில் உள்ளதா என்பதையும், அங்கு அங்கீகரிக்கப்படாத நபர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதையும் கண்காணிப்பு கேமராவைப் பயன்படுத்தி பார்க்க முடியும்..சேதம் அல்லது திருட்டை தடுக்கவும், அத்துமீறுபவர்களை அடையாளம் காணவும் இது உதவுகிறது.

பணியாளர்பாதுகாப்பு: தொழிலாளர் பாதுகாப்பு என்பது பெரும்பாலான கட்டுமான நிறுவனங்களின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும்.கட்டுமானத்தின் போது உயரத்திலிருந்து பணியாளர்கள் கீழே விழுவதையோ அல்லது உபகரணங்களை சுமந்து செல்லும் பொழுது எதிர்பாராதவிதமாக விபத்துக்கள் ஏற்படுவதையோ பெருமளவில் குறைக்க ட்ரோன்கள் உதவுகின்றன.. கட்டுமான மேலாளர்கள் ட்ரோன் வீடியோ கேமராக்களை பயன்படுத்தி பாதுகாப்பு காரணங்களுக்காக வேலைத்தளத்தைக் கண்காணிப்பது,தொழிலாளர்கள் சமநிலையில் இருப்பதை உறுதி செய்வது மற்றும் கட்டமைப்புகள் அல்லது உபகரணங்கள் தளர்வாகவோ அல்லது நிலையற்றதாகவோ இருப்பது போன்றவற்றை கண்டறிந்து தவறு ஏற்படாமல் சரி செய்ய முடியும்.

கட்டமைப்பு ஆய்வு மற்றும் புகைப்படம் எடுத்தல்: கனரக இயந்திரங்கள் மற்றும் பருமனான சாரக்கட்டுகளை மாற்றுவதற்கு ட்ரோன்கள் ஒரு முக்கியமான ஆய்வை வழங்குகின்றன..நிலைத்தன்மை மற்றும் நுண்ணிய விவரங்களை சரிபார்க்கவும்,பகுப்பாய்விற்காக உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை எடுக்கவும் கட்டமைப்புகளை சுற்றி ட்ரோன்கள் பறக்க விடப்படுகின்றன..வெப்பக் கசிவுகள், குளிரான இடங்கள் மற்றும் ஏதேனும் மின் சிக்கல்களை இதிலிருக்கும் வெப்ப உணரிகள் மூலம் கண்டறிய முடியும்.பாலங்கள், கோபுரங்கள் கூரைகள் மற்றும் சாரக்கட்டு போன்ற பெரிய அளவிலான கட்டமைப்புகளின் திட்டமிடப்பட்ட பராமரிப்புக்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.அதிக நபர்களைக் கொண்டு பல மணி நேரங்கள் செய்யவேண்டிய பணியை ட்ரோன் ஆப்பரேட்டர் தனிமனிதனாக சில மணிநேரங்களிலேயே செய்து முடித்துவிட முடியும்.

மேலும் செய்திகள்