‘பேஸ்மட்டம்’ நிரப்ப உதவும் கட்டுமான கழிவுகள்

கட்டமைப்புகளின் ‘பேஸ்மட்டம்’ பகுதிகளில் அதிகமாக கற்கள் இல்லாத மண்ணை நிரப்பி, தண்ணீர் விட்டு, உறுதியாக்கப்படுவது வழக்கம்.

Update: 2019-07-26 21:30 GMT
ட்டமைப்புகளின் ‘பேஸ்மட்டம்’ பகுதிகளில் அதிகமாக கற்கள் இல்லாத மண்ணை நிரப்பி, தண்ணீர் விட்டு, உறுதியாக்கப்படுவது வழக்கம். இன்றைய சூழலில் மண் கிடைப்பது சிரமமாக இருப்பதால், சில இடங்களில் இடிக்கப்பட்ட கட்டிடங்களின் கழிவுகளை (ரப்பீஸ்) கொட்டி தரை மட்ட பகுதியை நிரப்புவதாக தெரிய வந்துள்ளது. கட்டிட கழிவுகள் சரியான வடிவம் கொண்டதாக இருக்காது என்ற நிலையில், அவை வெற்றிடத்தை உருவாக்கி விடக்கூடும். அதன் காரணமாக, சிறிது காலத்தில் தரை மட்டத்தின் உட்புற சமநிலை பாதிக்கப்பட்டு, தரைத்தளத்தில் ஏற்ற இறக்கங்கள் உருவாகி அது நாளடைவில் விரிசல்களாக மாறிவிடும். தவிர்க்க இயலாத சூழலில் ‘ரப்பீஸ்’ எனப்படும் கான்கிரீட் கழிவுகளை பயன்படுத்த வேண்டிய சமயங்களில் அவற்றின் வடிவம் எப்படி உள்ளது என்பதை கவனிக்க வேண்டும். அவை, வெவ்வேறு அளவுகளில் இருந்தால் அவற்றை ஒரே அளவில் இருக்குமாறு கச்சிதமாக உடைத்த பின்னர் பயன்படுத்துவதுதான் சரியானது.

மேலும் செய்திகள்