அரசின் திட்டத்திற்கு உதவும் தேசிய நகர்ப்புற வீட்டு வசதி நிதியம்

பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டமானது, 2022ம் ஆண்டுக்குள் மக்களுக்காக கிட்டத்தட்ட 2 கோடி வீடுகள் கட்டி முடிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Update: 2019-06-29 10:08 GMT
அதன் அடிப்படையில், ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு நிதி அளிப்பதற்காக ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பிலான தேசிய நகர்ப்புற வீட்டு வசதி நிதியத்தை (National Urban Housing Fund  - NHUF) ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதலின்படி அமைக்கப்பட்டுள்ளது.

NUHF அமைப்பானது மூலப்பொருட்கள் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகத்தின் (Building materials and Technology Promotion Council  - BMTP) கீழ் செயல்படும். BMTP அமைப்பானது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பாகும். மேலும், சங்கங்கள் பதிவுச் சட்டம் ( Societies Registration Act) 1860ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டுமானத் தொழில் நுட்பங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்துவது BMTP அமைப்பின் பிரதான குறிக்கோளாகும்.

NUHF அமைப்பு, ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு கீழ்க்கண்ட வகைகளில் மத்திய நிதியுதவி வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது.

 கூட்டு முயற்சியில் மலிவு விலை வீடுகள் (Affordable Housing in Partnership -  AHP)

 பயனாளிகளுடன் இணைக்கப்பட்ட கட்டுமானம் (Beneficiary Linked Construction)

 குடிசைப்பகுதிகள் மறு சீரமைப்பு (Insitu Slum Redevelopment)

 வங்கி கணக்குடன் இணைந்த கடன் மானிய திட்டங்கள் (Credit Linked Subsidy Schemes)

மேற்கண்ட திட்ட நடைமுறைகள் மூலம் நகர்ப்புறங்களில் சொந்த வீடு உள்ளவர்கள் மற்றும் வீடு இல்லாதவர்கள் ஆகியோருக்கு மத்தியில் உள்ள இடைவெளி, இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்படுவதன் மூலம் படிப்படியாக அகற்றப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்