குறைந்த விலை வீடுகளுக்கு ஜி.எஸ்.டி இல்லை

ஜி.எஸ்.டி கவுன்சில் நலிவடைந்த பிரிவினருக்கு சலுகை விலை வீடு கட்டும் திட்டத்தை ஊக்குவிக்க முடிவு செய்தது.

Update: 2018-04-27 21:45 GMT
கடந்த ஜனவரி மாதம் 18–ம் தேதி கூடிய ஜி.எஸ்.டி கவுன்சில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு சலுகை விலை வீடு கட்டும் திட்டத்தை ஊக்குவிக்க முடிவு செய்தது. அதனை தொடர்ந்து, அந்த திட்டத்துக்கான ஜி.எஸ்.டி வரியை 12 சதவிகிதம் என்ற அளவுக்கு குறைத்து அறிவிக்கப் பட்டது.

நிலம் மற்றும் வீடு ஆகியவற்றின் மதிப்பை கழித்து கணக்கிடும்போது ஜி.எஸ்.டி வரியானது 8 சதவிகிதம் என்ற அளவுக்கே இருக்கும். இந்த சலுகைத் திட்டம், ஜனவரி 25–ம் தேதி முதல் அமலாகியுள்ளது.

அதன் அடிப்படையில் குறைந்த விலையுள்ள வீடுகளை வாங்குபவர்களுக்கு, 8 சதவிகித அளவுக்கே ஜி.எஸ்.டி கணக்கிடப்படும். அது உள்ளீட்டு வரிப்பயனாக, கட்டுமான நிறுவனங்களுக்கு அளிக்கப்படும். அந்த வரியை வீடு வாங்குபவர்களிடம் வசூலிக்க வேண்டாம் என்றும் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

மேலும் செய்திகள்