கட்டிட பணிகளை சுலபமாக்கும் ‘கம்போசிட்’ தொழில்நுட்பம்
கட்டுமான துறையில் இரண்டு அல்லது அதற்கும் மேல் மாறுபட்ட குணங்கள் கொண்ட பொருட்களை ஒருங்கிணைத்து புதியதாக உருவாக்கப்படும் பொருளை ‘காம்போசிட்’ என்பார்கள்.
மாறுபட்ட பொருள்கள் ஒருங்கிணையும்போது, ஒவ்வொரு பொருளுக்கென இருக்கும் தனிப்பட்ட தன்மைகள் ஒன்றாக இணைந்து, கூடுதல் வலுவுள்ளதாக மாற்றமடைகின்றன. கட்டுமானத்துக்கு அத்தகைய மாற்றங்கள் மிகவும் அவசியமான ஒன்றாகவும், உறுதியை தருவதாகவும் இருக்கிறது.
சிமெண்டு-பாலிமர்
மேற்கண்ட நிலையில், பல சோதனைகளுக்கு பின்னர் சிமெண்டு-பாலிமர் இணைப்பின் மூலம் உருவாக்கப்படும் கம்போசிட் சேர்மானம் வழக்கமான சிமெண்டு உபயோகத்துக்கு மாற்றாக பயன்படுகிறது. வழக்கமான சிமெண்டு உபயோகத்தில், கட்டமைப்புகளில் விரிசல்கள் வருவதை தவிர்க்க முடியாது. ஆனால், சிமெண்ட்-பாலிமர் கம்போசிட்டை அமைப்பில் விரிசல்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது. அதை அமெரிக்கன் சொசைட்டி பார் டெஸ்டிங் அண்ட் மெட்டீரியல்ஸ் என்ற சர்வதேச நிறுவனம் தரப்படுத்தி அங்கீகரித்துள்ளது.
கூடுதல் பயன்கள்
பொதுவாக, கம்போசிட் முறையில் பொருட்களை இணைக்கும்போது அவற்றின் பிடிமானம் எத்தகையது, பொருள்களின் விறைப்பு மற்றும் உறுதி ஆகியவை காரணமாக எப்படிப்பட்ட உறுதியான பொருள் கிடைக்கும் என்ற விஷயங்களை கணக்கிட்டு காம்போசிட் பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும், கட்டமைப்பின் வலிமை, குறைந்த எடை, வெப்பம் மற்றும் மின்சாரம் ஆகிய பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாகவும் உள்ளன. குறிப்பாக, நெருப்பின் காரணமாக பெரிய அளவிலான சேதம் ஆவதில்லை என்பதோடு, செலவு அதிகம் இல்லாமல், குறைந்த விலையில் காம்போசிட் கட்டுமான பொருட்களை தயாரிக்கப்படுகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.