வழுக்காத ரப்பர் தரைத்தளம்

ரப்பர் மூலமாகவும் தரைத்தளங்கள் அமைக்கப்படும் முறை பரவி வருகிறது.;

Update: 2018-01-27 05:44 GMT
இப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிகள் காரணமாக வெவ்வேறு பொருட்கள் மூலம் தரைத்தளங்கள் அமைக்கப்படுகின்றன. செராமிக், மார்பிள், கிரானைட் என்று விதவிதமான டைல்ஸ் வகைகள் தற்போது உபயோகத்தில் உள்ளன. அந்த வரிசையில் ரப்பர் மூலமாகவும் தரைத்தளங்கள் அமைக்கப்படும் முறை பரவி வருகிறது.

பிடிப்பு கொண்டவை

வீடுகளில் உள்ள வரவேற்பு அறை, சமையல் அறை, பாத்ரூம் போன்ற இடங்களில் அவற்றின் பாதுகாப்புக்கு ஏற்ப ரப்பர் தளங்கள் அமைக்கப்படுகின்றன. அவை, பாதங்களுக்கு பிடிப்பு ஏற்படுத்தும் வகையில் சொரசொரப்பு தன்மை கொண்டதாக இருக்கின்றன.

பல இடங்கள்

ரப்பர் தரைத்தளங்கள் பல வண்ணங்களில், விதவிதமான டிசைன்களில் வடிவமைக்கப்படுகின்றன. வீடுகளில் அல்லது பொது இடங்களில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், குளியல் அறை என பலரும் பயன்படுத்தும் பகுதிகளுக்கு இவ்வகையிலான தரைத்தளம் பாதுகாப்பானது என்று அறியப்பட்டுள்ளது.

சுத்தம் செய்ய எளிது

ரப்பர் தரைத்தளத்தை சுத்தப்படுத்துவது எளிதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அதற்குள் நீர் எளிதில் உட்புகாது. அதன் காரணமாக வழுக்கும் தன்மை இருப்பதில்லை. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் பாதுகாப்பாக நடப்பதற்கு ஏற்றவை. அழகிய ஒவியங்கள் உள்ளிட்ட இயற்கையான பொருட்களின் தோற்றத்தை அவற்றில் எளிதில் உருவாக்கலாம்.

பிரத்தியேக பயன்கள்

பல்வேறு நீள, அகலங்கள் மற்றும் கன அளவுகளிலும், பச்சை, கறுப்பு, சிவப்பு என்று பல்வேறு வண்ணங்களிள் அனைவர் மனதை கவரும் வகையிலும் சந்தையில் கிடைக்கின்றன. அதிகமாக ஜன நடமாட்டம் உள்ள இடங்களில் பாதுகாப்பாக இருப்பதோடு, இதர பிரத்தியேகமான பயன்பாடுகளுக்கும் ரப்பர் தரைத்தளங்கள் ஏற்றவை என்று கட்டுமான வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். 

மேலும் செய்திகள்