தெரிந்து கொள்வோம்: ‘நூக்’

‘நூக்’ என்பது வீட்டில் உள்ள இரண்டு சுவர்கள் இணைந்து உண்டாக்கும் ‘கார்னர் ஸ்பேஸ்’ அதாவது மூலைப்பகுதி ஆகும்.

Update: 2017-06-09 22:30 GMT
‘நூக்’ என்பது வீட்டில் உள்ள இரண்டு சுவர்கள் இணைந்து உண்டாக்கும் ‘கார்னர் ஸ்பேஸ்’ அதாவது மூலைப்பகுதி ஆகும். மூலைப்பகுதியாக இருப்பதால் சற்று ஒதுக்குப்புறமாகவும், அமைதியாகவும் இருக்கும். பொதுவாக, இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் சுவர்கள் அமைந்து கதவுகள் இல்லாமல் விசாலமாக அமையும் வீட்டின் ஒரு மூலைப்பகுதி ‘நூக்’ என்று சொல்லப்படும். இது மேலைநாட்டு கட்டுமான யுக்தியாக இருப்பினும், ஆசிய நாடுகள் பலவற்றிலும் வழக்கத்தில் உள்ளது.

பல வகைகளில் இந்த ‘நூக்’ அமைப்பு பயன்பாட்டில் இருக்கிறது. உதாரணமாக, ‘டைனிங் நூக்’, ‘ரீடிங் நூக்’, ‘கிச்சன் நூக்’ மற்றும் ‘ஸ்லீப் நூக்’ என்ற பல வகைகளில் உலக நாடுகளில் வடிவமைக்கப்படுகின்றன. ‘டைனிங் நூக்’ எனப்படுவது பெரும்பாலும் ‘பிரேக்பாஸ்ட்’ என்ற காலை உணவுக்கான இடமாக பயன்படுத்தப்படுகிறது. படிப்பதற்கான ‘நூக்’ அமைப்புகள் பெரும்பாலும் வீட்டில் உள்ள குட்டி பசங்களுக்கான இடமாக இருக்கும்.

பெரியவர்கள் அதிகமாக ‘ரீடிங் நூக்’ பயன்படுத்துவதில்லை. அதற்கு மாறாக மதிய வேளைகளில் சிறு தூக்கம் போடுவதற்கான இடமாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அதற்காக, கார்னர் பகுதியில் அழகாக பொருந்தும் படியாக கச்சிதமான சோபாவை அமைத்துக்கொள்கிறார்கள்.

பெண்கள் படிப்பதற்கு அல்லது சிறிய அளவில் சமையல் வேலைகளை செய்ய ‘நூக்’ அமைப்பை பயன்படுத்துகிறார்கள். அதன் அருகிலேயே சிறிய டேபிள் மற்றும் இரண்டு சேர்கள் போட்டு உணவை அருந்துவதற்கான இடமாகவும் பயன்படுத்துவது வழக்கம். சில வீடுகளில் அவர்களது வளர்ப்பு பிராணிகளுக்கான இடமாகவும் இருக்கிறது.

நமது ஊர்களில் வீடுகளின் உள்ள மூலைப்பகுதிகள் மற்றும் அறைகளின் மூலைப்பகுதிகள் ஆகியவற்றை மேற்கண்ட விதங்களில் பயன்படுத்தாமல் அழகான பூந்தொட்டிகள் வைக்கவும், சிறிய அளவில் பிள்ளையார் மற்றும் கிருஷ்ணன் சிலைகள் வைக்கவும் அல்லது அழகிய வண்ணங்களோடு கூடிய ஜாடிகளை வைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பெரிய நகரங்களில் இட வசதிக்கு தகுந்தாற்போல ‘நூக்’ என்ற மூலைப்பகுதி பல்வேறு பயன்பாடுகள் கொண்டதாக உள்ளது.

மேலும் செய்திகள்