டைல்ஸ் பயன்பாட்டுக்கு பொதுவான குறிப்புகள்
அதிக விலை கொண்ட வீடுகளை சிலர் வாங்குவதை விடவும், குறைவான விலை கொண்ட வீடுகளை அதிகமான பேர்கள் வாங்கவேண்டும் என்ற வணிக நோக்கில் பல கட்டுமான நிறுவனங்கள் தங்களது வர்த்தக வடிவத்தை நவீனமாக மாற்றிக்கொண்டுள்ளன.
அதிக விலை கொண்ட வீடுகளை சிலர் வாங்குவதை விடவும், குறைவான விலை கொண்ட வீடுகளை அதிகமான பேர்கள் வாங்கவேண்டும் என்ற வணிக நோக்கில் பல கட்டுமான நிறுவனங்கள் தங்களது வர்த்தக வடிவத்தை நவீனமாக மாற்றிக்கொண்டுள்ளன. அதன் காரணமாக, மத்திய தர வருவாய் கொண்ட மக்களை கவரும் விதத்தில் பல்வேறு கட்டுமான தொழில்நுட்பங்களை அந்த நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
அதன் காரணமாக, பெரிய பட்ஜெட் கொண்ட வீடுகளில் அமைக்கப்படும் வசதிகளான பளபளப்பான டைல்ஸ் வகைகள், பளிச்சென்ற வண்ணங்கள், நவீன வசதிகள் கொண்ட சமையலறை ஆகியவை இப்போது நடுத்தர பட்ஜெட் கொண்ட வீடுகளிலும் கிடைக்கும் சூழல் இருக்கிறது. சொந்த வீட்டை தாமாக கட்டுபவராக இருந்தாலும், ஒப்பந்ததாரர் மூலம் செய்பவராக இருந்தாலும் பல விஷயங்களை கவனிக்க வேண்டியதாக இருக்கும். அவற்றில் ‘டைல்ஸ்’ பற்றிய குறிப்புகளை காணலாம்.
• டைல்ஸ் அளவுகளில் ஒரு அடிக்கு ஒரு அடி என்ற அளவிலிருந்து வெவ்வேறு அளவுகள் கொண்ட வகைகள் விற்பனைக்கு உள்ளன.
• பொதுவாக, அறைகளின் பரப்பளவு என்ன..? என்பதை பொறுத்து அங்கு பதிப்பதற்கான டைல்ஸ் அளவுகளை முடிவு செய்வதே சரியானது.
• டைல்ஸ் வகைகளை பதிக்கும்போது இரண்டு டைல்ஸ்களுக்கு இடையில் உள்ள இணைப்புகள் வெளியில் தெரிவது, இணைப்புகள் வெளியில் தெரியாதது என இரண்டு வகைகளில் சந்தையில் கிடைக்கின்றன. நமது விருப்பம் மற்றும் அறையின் அழகு ஆகியவற்றை கருத்தில் கொண்டு டைல்ஸ் வகையை தேர்ந்தெடுக்கலாம்.
• ‘மார்பிள்’ போன்ற தோற்றத்திலும் டைல்ஸ் வகைகள் சந்தையில் உள்ளன. நமது பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு அவற்றை தேர்வு செய்ய, அவை நல்ல வாய்ப்பாக உள்ளன.
• பொதுவாக, ‘டைல்ஸ் வகைகளை’ பதிப்பதும், பராமரிப்பதும் சுலபமானது என்று பலரும் எண்ணுவது சரியானது. ஒரு முறை பதிக்கப்பட்ட டைல்ஸ் வகைகளை கச்சிதமாக பராமரித்தால் 10 ஆண்டுகள் வரை அதன் ஆயுள் நீடிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
• ‘பளிச்சென்ற’ தோற்றம் கிடைக்கும் என்பதற்காக பால் போன்ற வெண்மை நிறம் கொண்ட டைல்ஸ்களை பயன்படுத்துவது அதிக பராமரிப்பு கொண்டதாக இருக்கும். அதனால், வேறு மென்மையான வண்ணங்கள் கொண்ட டைல்ஸ் வகைகளை தேர்ந்தெடுக்கலாம்.
• பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகு தரைத்தளத்தில் பதிக்கப்பட்ட டைல்ஸ் வகையானது சில ஆண்டுகளில் சந்தையில் கிடைக்காமல் போகும் வாய்ப்புகள் உள்ளன. மேலும், ஏதாவது பொருள்கள் விழுந்து டைல்ஸ் உடையும் பட்சத்தில், அதற்கு மாற்றாக வேறு வகை டைல்ஸ் பதிக்கப்படும் சிக்கலை தவிர்க்க தரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் வகைகளில் 10 அல்லது 12 டைல்ஸ்களை கூடுதல் சேமிப்பாக வைத்துக் கொள்வது நல்லது.
• இப்போதெல்லாம், பெரிய நிறுவன தயாரிப்பாக இருந்தாலும் நமது பட்ஜெட்டுக்கு ஏற்ற விலைகளில் டைல்ஸ் வகைகள் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், குறைந்த செலவு என்ற காரணத்திற்காக தரம் பற்றிய உத்தரவாதங்களையும் கவனத்தில் கொள்வது முக்கியம்.