அவசியமான வாஸ்து குறிப்பு

ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாங்கப்பட்ட காலி மனையில் உடனடியாக வீடு கட்டும் வேலைகளை தொடங்கி விடுவது கூடாது.

Update: 2017-05-12 22:30 GMT
மேலோட்டமாக அந்த மனையை உழுது நவ தானியங்களை பயிர் செய்து, அவை வளர்ந்த நிலையில் பசுக்களை விட்டு மேய விட வேண்டும்.

அவ்வாறு பசுக்கள் மேயும் சமயத்தில், அவற்றின் கோமியம் மற்றும் வாயில் இருந்து சிந்தும் நுரை போன்றவை அந்த பூமியில் கலக்கும். இதனால் அந்த நிலத்தில் உள்ள தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பின்னர் இன்றைக்கு பிரபலமாகி வரும் இயற்கை விவசாயம் மேலே சொன்னதைத்தான் சொல்கிறது.

இயற்கை உரங்களான பசுவின் எரு, சிறு நீர் போன்றவைகளை நிலத்தில் மக்க விடுவதால் நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகி நிலத்தை வளப்படுத்துவதுடன் விளைச்சலையும் பெருக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. சித்தர்கள் வலியுறுத்திய தோஷம் நீக்குதல் இத்தகைய முறையானது அறிவியல் பார்வை கொண்டதாகவும் கருதலாம்.

மேலும் செய்திகள்