தெரிந்துகொள்வோம்: ‘பர்கோலா’

பால்கனிகளுக்கு மேல்புறம், வீட்டின் வெளிப்புறம் மற்றும் தோட்டங்களில் நான்கு தூண்களோடு மேல் புறம் கூரை ஏதுமில்லாமல் குறுக்கு சட்டங்கள் மட்டும் இருக்கும் கட்டமைப்பு ‘பர்கோலா’ எனப்படும்.

Update: 2017-05-05 20:00 GMT
பால்கனிகளுக்கு மேல்புறம், வீட்டின் வெளிப்புறம் மற்றும் தோட்டங்களில் நான்கு தூண்களோடு மேல் புறம் கூரை ஏதுமில்லாமல் குறுக்கு சட்டங்கள் மட்டும் இருக்கும் கட்டமைப்பு ‘பர்கோலா’ எனப்படும். மேலை நாடுகளில் வழக்கத்தில் இருந்தாலும் நமது நாட்டிலும் இந்த முறையானது கட்டிட கலை வல்லுனர்களால் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது. வீட்டின் முன்புறம் வாசலில் அமைத்தால் பசுமையும் வண்ண மலர்களும் கொண்ட கொடிகளை அழகாக அதில் படரவிடலாம். பால்கனியின் மேற்புறம் அமைத்து அதில் வண்ண மயமான கொடி வகைகளை படரவிட்டு வீட்டின் அழகை அதிகப்படுத்தி காட்டலாம். மரங்களால் அமைக்கும் முறை மட்டுமல்லாமல் பல்வேறு பொருட்களாலும் ‘பர்கோலாக்கள்’ தற்போது கட்டமைக்கப்படுகின்றன.

இயற்கையான தோற்றத்துடனும், பார்வைக்கு அழகிய தன்மையுடனும் இருப்பது மரத்தாலான பொருட்களின் தன்மையாகும். தரையில் அமைக்கும் ‘பர்கோலா’ வடிவமைப்புக்கு மரங்கள்தான் சிறந்த தேர்வாக இருக்கும். மழை, வெயில், பனி, காற்று போன்ற இயற்கையின் தாக்கங்களை அலுமினியம் எளிதாக தாங்கும் தன்மை பெற்றதாக இருப்பதால் சுவர்களின் மேல்புறத்தில் வெளியே நீட்டிகொண்டிருக்கும் அமைப்பில் இருக்கும் ‘பர்கோலா’ வகைகளுக்கு அலுமினியம் பொருத்தமாக இருக்கும். மேலும், கான்கிரீட் கொண்டும் ‘பர்கோலா’ அமைப்பது நமது நாட்டு வழக்கமாக உள்ளது. மற்ற வகை பொருட்கள் கொண்டு அமைக்கும் முறையும் இப்போது பரவி வருகிறது. அழகியல் பார்வை சார்ந்த வி‌ஷயமாக ‘பர்கோலா’ இருப்பதால் நகர்ப்புறங்களில் இவை பரவலாக இருக்கின்றன.

மேலும் செய்திகள்