அறைகளின் அழகை கூட்டும் ஜன்னல் திரைகள்
வீடுகளில் உள்ள அறைகளில் வெளிச்சம் மற்றும் காற்றோட்ட வசதிகளுக்காக ஜன்னல்கள் பொருத்தப்படுகின்றன.
வீடுகளில் உள்ள அறைகளில் வெளிச்சம் மற்றும் காற்றோட்ட வசதிகளுக்காக ஜன்னல்கள் பொருத்தப்படுகின்றன. மரங்கள், இரும்பு,
‘பி.வி.சி’ மற்றும் அலுமினியம் போன்ற பொருட்களால் அவை வடிவமைக்கப்படுகின்றன. வீட்டிலுள்ள ஜன்னல்களை எல்லா நேரங்களிலும் திறந்து வைத்திருப்பது என்பது இயலாத ஒன்றாகும். அதேபோல எல்லா நேரங்களிலும் மூடப்பட்ட நிலையில் வைத்திருப்பதும் முடியாது.
‘பிளைன்ட்ஸ்’
மேற்கண்ட சிக்கல்களை தவிர்ப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு ஏற்பாடுகள் ‘திரை மறைப்புகள்’ என்று சொல்லப்படுகின்றன. ஆங்கிலத்தில் அது ‘பிளைன்ட்ஸ்’ என்று வழங்கப்படும். காற்று மற்றும் வெளிச்சத்தை தடை செய்து விடாமல், அதே சமயம் அறைக்குள் வெளிச்சம் வருவது போலவும், அறையின் தனித்தன்மையை பாதுகாப்பது போலவும் அவை செயல்படுகின்றன. தற்போதைய காலகட்டத்தில் 10–க்கும் மேற்பட்ட ‘பிளைன்ட்ஸ்’ வகைகள் உபயோகத்தில் இருக்கின்றன. நவீன நாகரிகத்தின் பிரதிபலிப்புகளாக தோற்றமளிக்கும் அவற்றை பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.
‘வெனிஷியன் பிளைன்ட்ஸ்’
இவ்வகை திரை மறைப்புகள் கைகளால் ஏற்றி இறக்கக்கூடிய வகையிலும், சிறிய வகை மோட்டார் கொண்டு இயக்கும் வகையிலும் பயன்படுத்தலாம். பொதுவாக ‘வெனிஷியன் பிளைன்ட்ஸ்’ வகைகள் மரம், உலோகம், பிளாஸ்டிக் ஆகியவற்றால் தயார் செய்யப்படுகின்றன. அழகாகவும், நவீன தோற்றத்துடனும், பயன்படுத்த எளிதாகவும் இருப்பதால் பரவலாக இவை உபயோகத்தில் இருக்கின்றன.
‘பிரிண்டடு ரோலர் பிளைன்ட்ஸ்’
நமக்கு வேண்டிய வண்ணங்கள் அல்லது டிசைன்களை திரைகளில் பதித்து அமைத்துக்கொள்லலாம். துணிகளில் தயாரிக்கப்பட்டதாக இருப்பதால், பராமரிப்பது சுலபம். மேலும், அறைகளின் வண்ணங்களுக்கு ஏற்பவும் பொருத்திக்கொள்ளலாம். முழுவதும் அல்லது பாதி மட்டும் திறந்த நிலையிலும் இவற்றை உபயோகப்படுத்த முடியும். இவற்றையும் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்கலாம்.
‘ரோமன் பிளைன்ட்ஸ்’
இவ்வகை திரைத்தடுப்புகள் மென்மையான துணிகளால் தயாரிக்கப்படுகின்றன. திரைகளுக்கு இடையில் பொருத்தப்பட்ட சிறுவகை அலுமினிய குழாய்கள் காரணமாக இவை கச்சிதமான நேர் கோடுகளாக அழகிய தோற்றம் தரும். பயன்படுத்தப்படாத சமயங்களில் மேலேற்றி வைக்கும்போது அழகான மடிப்புகளுடன் காட்சியளிக்கும். கண் கவரும் அழகிய வண்ணங்களில் இவை சந்தையில் கிடைக்கின்றன.
‘பாம்பூ (மூங்கில்) பிளைன்ட்’
ஜன்னல்களுக்கான மறைப்புகளில் மூங்கிலை சிறுசிறு குச்சிகளாக செதுக்கி எடுத்து பாய் போல கட்டமைக்கப்படுகின்றன. அதனால், சூரிய வெப்பம் அல்லது அதிகப்படியான வெளிச்சம் ஆகியவை அறைகளுக்குள் வருவது தவிர்க்கப்படுகிறது. மூங்கில் மற்றும் மரத்தாலான திரை மறைப்புகளில் 20–க்கும் மேற்பட்ட ‘டிசைன்கள்’ இருக்கின்றன. விலையை பொறுத்தவரையில் மற்றவற்றை விடவும் குறைவாக இருப்பதோடு, இவை பராமரிக்கவும் எளிதாக இருக்கும்.
‘ஸ்கை லைட் பிளைன்ட்ஸ்’
இவ்வகை திரை மறைப்புகள் பக்கவாட்டு சுவர்களில் இல்லாமல் மேற்புற ‘சீலிங்’ அமைப்புகளில் பொருத்தப்படுபவையாகும். மேற்கூரையானது கூம்பு வடிவத்தில் அல்லது வெளிச்சம் வருவதற்காக கண்ணாடிகள் அமைக்கப்பட்டிருந்தால், அவற்றிலிருந்து வரக்கூடிய அதிகப்படியான வெளிச்சத்தை கட்டுப்படுத்த அமைக்கப்படும் திரைகளாகும். பெரும்பாலும் இவை சிறிய வகை மோட்டார்களால் இயங்கும்படி இருக்கும்.
‘எக்ஸ்டீரியர் பி.வி.சி பிளைன்ட்’
இதுவரையில் நாம் பார்த்தவை வீடுகளின் உட்புறமாக அமைக்கப்படும் திரை மறைப்பு வகைகள் ஆகும். ஆனால் ‘எக்ஸ்டீரியர் பி.வி.சி. பிளைன்ட்’ என்பது ஜன்னலுக்கு வெளியில் பொருத்தப்படுவதாகும். வெளிச்சம், காற்று, மழை மற்றும் குளிர் ஆகிய இயற்கை பாதிப்புகளிலிருந்து அறைகளையும், அதில் உள்ள பர்னிச்சர் பொருட்களையும் பாதுகாக்கின்றன. ஈரத்தால் பாதிக்காதவாறு ‘பிளாஸ்டிக்’ வகையிலான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் சுலபமாக கையாள முடியும்.
மற்ற வகைகள்
மேற்கண்ட ஜன்னல் திரை மறைப்புகள் தவிரவும் ஆங்கில ‘எஸ்’ வடிவம் கொண்ட ‘ட்ரிபிள் ஷேடு பிளைன்ட்ஸ்’, ‘பீகாக் ஷேடு பிளைன்ட்ஸ்’, ‘ஹனி கோம்ப் பிளைன்ட்ஸ்’, ‘வெர்மன் பிளைன்ட்’, ‘லூனாரெட் பிளைன்ட்ஸ்’ மற்றும் ‘வெர்டிகல் பிளைன்ட்ஸ்’ என்ற வெவ்வேறு வகையான தொழில்நுட்பங்களுடன், பலவகை மாடல்கள் சந்தையில் கிடைக்கின்றன.