வீடு, மனை பற்றிய தகவல் தரும் இணைய தளங்கள்
‘சொந்த வீடு’ என்ற கனவை நோக்கி இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் செல்லும் நிலையில், அதை நனவாக்கும் முயற்சிகளில் கச்சிதமான திட்டம் அவசியமானது.
‘சொந்த வீடு’ என்ற கனவை நோக்கி இன்றைய நகர்ப்புற வாழ்க்கையில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் செல்லும் நிலையில், அதை நனவாக்கும் முயற்சிகளில் கச்சிதமான திட்டம் அவசியமானது. இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் அதற்கு துணையாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய தொழில்நுட்பங்கள் வாயிலாக சரியான தகவல்களை பெற்று அதற்கேற்ப செயல்பட்டு கனவை நனவாக்க முடியும்.
நமது வசதிகளுக்கேற்ப எந்த இடத்தில் வீடு வாங்கலாம்..?, வில்லங்க விவகாரங்கள் இல்லாமல் எப்படி வாங்குவது..? சாலை, தண்ணீர் போன்ற வசதிகள் உள்ளதா..? என்ற கேள்விகள் பலரது மனதில் இருக்கும். அதற்காக பலரிடமும் விசாரித்து, பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியதாக இருக்கும். அதற்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி பல இடங்களுக்கும் செல்ல வேண்டியது அவசியமாக இருக்கும்.
இடத்தின் விலை, பதிவு செய்யும் முறைகள், வில்லங்கம் ஏதேனும் இருந்தால் அவை பற்றிய விளக்கம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள அரசின் பல்வேறு துறைகள், இணையதளங்கள் வாயிலாக உதவி செய்கின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடம் அல்லது வீடு வாங்க என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய தகவல்களை அவற்றின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். வீட்டில் இருந்தபடியே நமக்கு தேவையான தகவல்கள் பற்றியும், அவற்றை பெறுவதற்கான வழிகள் பற்றியும் இங்கே காணலாம்.
சி.எம்.டி.ஏ அமைப்பு
இந்த அமைப்பின் இணையதளம் வாயிலாக ஒரு கட்டிடத்தின் ‘பிளான் அப்ரூவல்’, ‘அப்ரூவல் செய்யப்பட்டுள்ள லே–அவுட் காப்பி’, இடம் உள்ள பகுதியின் முழு விபரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். சம்பந்தப்பட்ட இடத்தின் ‘மாஸ்டர் பிளான்’ பற்றிய தகவல்களையும் பார்க்கலாம். ஒரு கட்டமைப்பானது கட்டி முடிக்கப்பட்டதற்கான ‘பணி நிறைவு’ சான்றிதழையும் பார்க்க முடியும்.
அதன் இணையதள முகவரி :
http://www.cmdachennaigov.in/
பெருநகர சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக சென்னையை பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். சென்னையின் வரலாறு, சென்னையின் அமைப்பு உள்ளிட்ட பல விபரங்கள், குறிப்பிட்ட கட்டமைப்புக்கான ‘பில்டிங் பிளான்’ மற்றும் ‘டவுன் பிளான்’ ஆகியவற்றை அதன் இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ள இயலும். மேலும், ஒரு கட்டுமானம் எந்த நிறுவனத்தால் கட்டப்பட்டது என்ற தகவல்களும் அதில் இருக்கும்.
அதன் இணையதள முகவரி :
http://www.chennaicorporation.gov.in/
தமிழ்நாடு பதிவுத்துறை
தமிழ்நாடு ‘ரெஜிஸ்ட்ரேஷன் டிபார்ட்மெண்ட்’ இணையதளத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் உரிய ‘ரிஜிஸ்ட்ரேஷன் கட்டணம்’, ‘ஸ்டாம்ப் கட்டணம்’ மற்றும் எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள இயலும். தமிழகத்தின் அனைத்து பகுதி இடம் மற்றும் கட்டிடங்களின் முழு விபரங்களையும், வில்லங்க சான்றிதழையும் அதற்குரிய கட்டணங்கள் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
அதன் இணையதள முகவரி:
http://www.tnreginet.net/
தமிழ்நாடு அரசு
வீடு வாங்குபவர்களுக்கு அரசு அளிக்கக்கூடிய அனைத்து சலுகைகள் பற்றிய முழு விபரங்களை இந்த இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம். நமக்கு தேவைப்படும் ‘டாக்குமெண்ட்டுகளை’ ‘ஆன்லைன்’ மூலமாக குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி நகலாக பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக, ஒரு வீட்டுக்கு அடிப்படை தேவைகளாக இருக்கும் தண்ணீருக்கான இணைப்பு, மின்சார இணைப்பு மற்றும் வேறு புகார்கள் இருந்தால் அதற்குரிய விண்ணப்பங்கள் ஆகியவை இந்த இணையதளத்தில் இருக்கும்.
அதன் இணையதள முகவரி:
http://www.chennai.tn.nic.in/
மேற்கண்ட இணையதளங்கள் மூலம் தேவையான அனைத்து விபரங்களையும் அறிந்துகொண்ட பின்னர், ஒரு வழக்கறிஞரிடம் ‘லீகல் ஒப்பீனியன்’ பெற்று வீடு அல்லது மனை வாங்குவது பற்றி தீர்மானிக்கலாம்.