கச்சிதமான குழாய் பாதுகாப்பு அமைப்புகள்
வீடுகளில் உபயோகிக்கப்படும் தண்ணீரில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு கழிவு நீராக வெளியேற்றப்படுகிறது. பழைய காலங்களில் தரையில் சிறிய அளவில் கால்வாய் அமைக்கப்பட்டு அதன் வழியாக கழிவு நீர் செல்வதற்கான வழிவகைகள் செய்யப்பட்டது.
வீடுகளில் உபயோகிக்கப்படும் தண்ணீரில் ஒரு குறிப்பிடத்தக்க அளவு கழிவு நீராக வெளியேற்றப்படுகிறது. பழைய காலங்களில் தரையில் சிறிய அளவில் கால்வாய் அமைக்கப்பட்டு அதன் வழியாக கழிவு நீர் செல்வதற்கான வழிவகைகள் செய்யப்பட்டது. காலப்போக்கில் ‘பிளாஸ்டிக்’ குழாய்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தரைக்கு கீழாக கழிவு நீர் செல்லும்படி குழாய்கள் அமைக்கப்பட்டன. வீட்டில் இருந்து செல்லும் கழிவு நீர் குழாய்கள் தெருவில் இருக்கும் பெரிய சாக்கடையுடன் இணைக்கப்பட்டன.
‘டிராப்’ அமைப்பு
குழாய்கள் வழியாக கழிவு நீரை வெளியேற்றுவது பாதுகாப்பானதாக இருந்தாலும், அடைப்புகள் அவ்வப்போது ஏற்பட்டு நீர் செல்வதில் தடை ஏற்பட்டது. மேலும், கழிவு நீரின் கெட்ட வாசனைகள் வீடுகளுக்குள் பாதிப்பை உண்டாக்கும் நிலையும் ஏற்பட்டது. அத்தகைய சிக்கல்களை தவிர்ப்பதற்கு கண்டுபிடிக்கப்பட்ட தொழில் நுட்பமாக ‘டிராப்’ எனப்படும் நீர்த்தடுப்பு அமைப்பு உள்ளது.
குழாய் அடைப்புகள் தடுப்பு
கழிவு நீர் அந்த அமைப்பு வழியாக செல்லும்போது தண்ணீர் தவிர மற்ற பொருட்கள் அந்த ‘டிராப்’ அமைப்பில் தங்கிவிடுகின்றன. நாளடைவில் கழிவு நீர் செல்வதில் தெரியக்கூடிய மாற்றத்தை அறிந்து, முன்பாகவே குழாயில் பொருத்தப்பட்டுள்ள ‘கிளீனிங் ஐ’ எனப்படும் ‘திறக்கக்கூடிய அமைப்பு’ வாயிலாக, குழாயை திறந்து சுத்தம் செய்ய இயலும். அத்தகைய ‘டிராப்’ வகைகள் பற்றி இங்கே காணலாம்.
‘கல்லி டிராப்’
‘பாத்ரூம்’, ‘வாஷ் பேஸின்’, ‘கிச்சன் சிங்க்’ ஆகியவற்றிலிருந்து வெளியில் செல்லக்கூடிய குழாய்களில் பொருத்தப்படக்கூடிய நீர்த்தடுப்பு அமைப்பு இதுவாகும். இவற்றின் முக்கிய வேலையானது மேற்கண்ட இடங்களில் தொடர்ந்த நீரின் பயன்பாடு காரணமாக கெட்ட வாசனைகள் வீட்டுக்குள் வராமல் தடுப்பதாகும். மேலும், அதன் தடுப்பு அமைப்பு காரணமாக சிறு பூச்சிகள் குழாய்கள் வழியாக வீடுகளுக்குள் வருவதும் தடை செய்யப்படுகிறது. இவை வீட்டுக்கு வெளிப்புறமாக எளிதில் சுத்தம் செய்யப்படும் வகையில் பொருத்தப்படுகின்றன.
‘பி டிராப்’
கிட்டத்தட்ட ஆங்கில ‘யூ‘ வடிவ குழாய் போன்ற வடிவத்தில் தோற்றமளிக்கும் இவ்வகை ‘டிராப்’ வகைகள் இந்திய வகை ‘டாய்லெட்’ அமைப்புகளில் பொருத்தப்படுகின்றன. கெட்ட வாசனைகளை உள்ளே வராமல் தவிர்க்குமாறு நீர் தடுப்பு கொண்ட ‘டிராப்’ வகை இதுவாகும்.
‘எஸ் டிராப்’
இவ்வகை அமைப்பும் கழிவறைகளில் பொருத்தப்படுவதுதான். ‘வெஸ்டர்ன் குளோசெட்’ என்று சொல்லப்படும் அமரக்கூடிய கழிவறை அமைப்புகளில் இவை பொருத்தப்படுகின்றன. கழிவு நீரானது நேரடியாக வெளியே செல்லாமல் இவ்வகை தடுப்பு அமைப்பின் மூலம் வெளியேறும்போது கெட்ட வாசனைகள் ஏற்படுவதில்லை.
‘கியூ டிராப்’
சற்றேறக்குறைய ‘எஸ் டிராப்’ போன்று தோற்றமளிக்கும் இவ்வகை நீர்த்தடுப்பு முறையானது மேல்மாடிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளில் பொருத்தப்படுவதற்காக விஷேசமாக தயாரிக்கப்படுகின்றன. தரைத்தளங்களில் அமைக்க இவ்வகை ‘டிராப்’ வகைகள் உபயோகிக்கப்படுவதில்லை.
‘புளோர் டிராப்’
சாதாரணமாக தரைத்தளங்களின் ஒரு மூலையில் அமைக்கப்படும் துளைகள் கொண்ட, சிறு வட்ட வடிவ உலோகம் அல்லது கெட்டியான பிளாஸ்டிக் மூடி போன்ற ‘டிராப்’ அமைப்பு இதுவாகும். தரை மட்ட அளவில் இருந்து சிறிது தாழ்வாக இருப்பதால் அதன் மூலம் நீர் வழிந்து செல்லும்போது குழாயை அடைத்துக்கொள்ளும் தன்மை உள்ள பொருட்கள் அதன் மேற்புறத்தில் தடுக்கப்பட்டுவிடும்.
‘பாட்டில் டிராப்’
சமையலறை ‘சிங்க்’ மற்றும் கை கழுவும் ‘வாஷ் பேசின்’ ஆகியவற்றின் கீழ்ப்புறத்தில் நீர் வெளியேறும் குழாயில் பொருத்தப்படும் அமைப்பு இதுவாகும். வெளிப்புறத்தில் உள்ள குழாயிலிருந்து கெட்ட வாசனைகள் வருவதை தடுக்கவும், கை தவறி அதற்குள் விழுந்துவிட்ட சிறிய பொருட்களை எடுப்பதற்கும் ‘பாட்டில் டிராப்’ பயன்படுகிறது. ஒரு சிறிய பாட்டில் போல தோற்றம் தருவதால் அதற்கு அந்த பெயர்.
‘இன்டர்செப்டிங் டிராப்’
வீட்டிலிருந்து வெளியில் செல்லக்கூடிய கழிவு நீர் குழாய்களை ஒன்றாக, இவ்வகை ‘டிராப்’ அமைப்பில் இணைத்து கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. அதன் வாயிலாக சுகாதாரமான சூழல் வீட்டுக்குள் நிலவுவதற்கு ஏதுவாக இருக்கும். இவை பெரும்பாலும் உலோகங்களால் தயாரிக்கப்பட்டதாக இருக்கும்.