அனைத்து வீடுகளிலும் செடிகள் மரங்கள் வைப்பது தொன்று தொட்டு வழக்கத்தில் உள்ளது. வீட்டின் கட்டமைப்புக்கு இடவசதிக்கு ஏற்றவாறு மரங்கள் சிறு செடிகள் கொடிகள் என்று தோட்டங்கள் பராமரிக்கப்படுகிறது. தாவரங்கள் வீட்டில் வளர்ப்பதால் காற்றோட்ட வசதியும் மனிதனின் உடலுக்கும் வீட்டிற்கும் பல நன்மைகளையும் தருகிறது.
கட்டிடங்கள் கட்டுவதற்கு மட்டும் வாஸ்து பார்க்காமல் செடி கொடிகள் வைப்பது தோட்டத்தை உருவாக்குவதற்கும் தோட்டத்தில் தாவரங்கள் நடுவதற்கும் வாஸ்து சாஸ்திரம் கடைபிடிக்க வேண்டும். பண்டைய கால முதலே எந்தெந்த செடிகள் வீட்டில் வளர்க்கலாம் எங்கு வளர்க்கலாம் எந்த திசை நோக்கி வைக்கலாம் என்பது பற்றி தெரிந்து கொண்டு தோட்டங்கள் வைப்பது சால சிறந்தது.
உங்கள் வீட்டு தோட்டத்தில் துளசி செடி இருப்பது மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். மல்லிகை, மா, பலா, எலுமிச்சை, பாதாம், அன்னாசி, மாதுளை மற்றும் வேப்பமரம் இவைகளை வளர்ப்பதும் மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். வேம்பும் மாதுளையும் மருத்துவ ரீதியாகவும் பல வகைகளில் பயன்படுகிறது.
நெல்லி வளர வளர செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இவ்வகை தாவரங்கள் வீட்டில் வளர்ப்பதால் நேர்மறை ஆற்றலை உருவாக்குகிறது. வீட்டின் உட்புறத்தில் ஜன்னல் ஓரங்களில் செடிகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அமைவது நேர்மறை ஆற்றல் வீட்டுக்குள்ளே வருவதை ஜன்னல்கள் தடுக்கின்றன.
வீட்டின் வெளிப்புறத்தில் முள் செடிகளை வளர்த்தல் நல்லது. சூரிய ஒளி தண்ணீர் வசதி உள்ள இடங்களில் தாவரங்களை வளர்ப்பது மிக முக்கியம்.
வீட்டில் மா வாழை மரங்களை நடுவதும் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தும் வீட்டில் மரங்களை நடும்போது வீட்டிற்கும் மரங்களுக்கும் நடுவில் இடைவெளி அதிகமாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் மரத்தின் வேர்கள் கட்டடத்தை பாதிக்காத வண்ணம் செடிகளை பராமரிக்கலாம்
வீட்டை சுற்றி தோட்டங்கள் அமைக்கும் போது நேர்மறை ஆற்றலை உருவாக்கும் தாவரங்களை தேர்வு செய்து நடுவது மிக முக்கியம். அவைகளை எந்த திசை நோக்கி எந்த திசையில் வைக்கலாம் என்பதையும் தெரிந்து நடுவது நல்லது.
வடக்கு திசைகளில் தோட்டங்கள் அமைப்பது சிறப்பானது. துளசி கிழக்கு மற்றும் வடகிழக்கு திசை நோக்கி அமைக்க வேண்டும். பெரிய மரங்களை வீட்டில் நடுவதை கொஞ்சம் தவிர்க்கலாம். தோட்டங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். செல்லப் பிராணிகளை வளர்க்கும் போது அவைகளை வடக்கு திசையில் வைத்து பேணிக்காப்பது நன்றாகும்.
கிழக்கு திசை துளசி மற்றும் மரம் வைப்பதற்கு மிகவும் உகந்தது. அழகான பூந்தோட்டங்கள் கிழக்கு திசைகளில் அமைக்கலாம். குழந்தைகள் விளையாடுவதற்கான ஊஞ்சல் கிழக்கு திசையில் கட்டலாம். கிழக்கு திசையில் பெரிய மரங்கள் வைப்பது தவிர்க்க வேண்டும். கிழக்கு திசையில் சிறிய நீரூற்றுகளை அலங்கரிக்கலாம். இவையெல்லாம் நேர்மறை ஆற்றலை தரும்.
தெற்கு திசையில் தோட்டத்தை அலங்கரிக்கும் சிலை போன்ற தோட்ட கலை அமைப்புகளை உருவாக்கலாம். அசோக மரம் போன்ற உயரமான மரங்களை தெற்கு திசை நோக்கி வைத்தால் மிகவும் நல்லது. மல்லிகை சாமந்தி போன்ற பூச்செடிகளை தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் வளர்க்கலாம்.
மேற்கு திசையில் ஆலமரம் மா போன்ற பெரிய மரங்களை நடுவதற்கு ஏற்றது. கலை அலங்காரப் பொருட்களும் மற்றும் நீரூற்றுகளையும் மேற்கு திசையில் அலங்கரிக்கலாம்.
வீட்டுக்குள்ளேயும் மணி பிளாண்ட் போன்ற செடிகளை வளர்ப்பது பண வரவை அதிகரிக்கும். வீட்டை சுற்றி தோட்டங்களில் கற்றாழ ஓமவள்ளி வெற்றிலை கொடி போன்ற மூலிகை செடிகளையும் வளர்ப்பது வீட்டிற்கும் உடல் நலத்திற்கும் உகந்ததாகும்.